TA/Prabhupada 0810 - இந்த பௌதிக உலகின் ஆபத்து நிலைகண்டு கிளர்ச்சியடைய வேண்டாம்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0810 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0809 - Shortcut of 'Demon-Cracy' is 'Democracy'|0809|Prabhupada 0811 - Rupa Gosvami's Instruction - Somehow or Other, You Become Attached to Krsna|0811}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0809 - அரக்கரின் பைத்தியக்காரத்தன குறுக்குவழியே ஜனநாயகம்|0809|TA/Prabhupada 0811 -எந்த வகையிலாவது நீங்கள் கிருஷ்ணரோடு இணைந்திருக்கவேண்டும் - இதுவே ரூபகோஸ்வாமியின் அறி|0811}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:25, 4 August 2021



741003 - Lecture SB 01.08.23 - Mayapur

எனவே இங்கே ஒரு விஷயம் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த முஹூர் விபத்-கணாத் (SB 1.8.23). முஹு என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும், அல்லது எப்போதும், கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேரம். முஹு. முஹு என்றால் "மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும்" என்று பொருள். எனவே விபத். விபத் என்றால் "ஆபத்து" என்று பொருள். கணா, கணா என்றால் "பல". ஒரு வகையான ஆபத்து அல்ல, ஆனால் பல்வேறு வகையான ஆபத்துக்கள். எனவே முஹூர் விபத்-கணாத், யார் கஷ்டப்படுகிறார்கள்? இப்போது, ​​குந்தி. வேறு யார் துன்பப்படுகிறார்கள்? இப்போது, ​​தேவகி. தேவகி கிருஷ்ணரின் தாய், மற்றும் குந்தி கிருஷ்ணரின் அத்தை. அவர்கள் இருவரும், சாதாரண பெண்கள் அல்ல. கிருஷ்ணரின் தாயாக அல்லது கிருஷ்ணரின் அத்தையாக ஆவது சாதாரண விஷயம் அல்ல. இதற்குப் பல, பல பிறவிகளின் தபஸ்ய தேவைப்படுகிறது. பின்னர் ஒருவர் கிருஷ்ணரின் தாயாக முடியும். அவர்கள் எப்போதும் விபத், முஹுர் விபத்-கணாத் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணர் அவர்களுக்கு மிக எளிதாக அடையக்கூடிய நபர் என்றாலும், தாய் இன்னும் ... தேவகி கிருஷ்ணரைப் பெற்றெடுத்தாள், ஆனால் ஆபத்து மிகவும் கொடூரமானது, அவளால் தன் மகனை வைத்திருக்க முடியவில்லை. உடனடியாக மாற்றியாக வேண்டும். எவ்வளவு விபத், எவ்வளவு விபத் என்று பாருங்கள். கிருஷ்ணரின் தாய் தன் மகனை மடியில் வைத்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு தாயும் விரும்புகிறாள், ஆனால் கம்ஸ கலேன இருந்ததால் அவளால் வைத்திருக்க முடியவில்லை. பாண்டவர்களுக்குக் கிருஷ்ணர் எப்போதும் துணையாக இருந்தார். எங்கெல்லாம் பாண்டவர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் கிருஷ்ணரும் இருக்கிறார். கிருஷ்ணா... திரௌபதி ஆபத்தில் இருக்கிறாள். அவள் குரு வம்சத்தினர், துரியோதனன், து꞉ஷாஸன ஆகியோரால் நிர்வாணமாகச் செய்யப்பட இருந்தாள். கிருஷ்ணர் துணியை வழங்கினார். ஆகவே, பல ஆண்களின் கூட்டத்தில் ஒரு பெண் நிர்வாணமாக ஆக்கப்பட்டால், அது மிகப்பெரிய ஆபத்து. அது மிகப்பெரிய ஆபத்து, மற்றும் கிருஷ்ணர் காப்பற்றினார். இதேபோல், குந்தி காப்பாற்றப்பட்டார் ... ஆபத்துகள் பின்வரும் ஸ்லோகங்களில் விவரிக்கப்படும். அவள் சொல்கிறாள், விமோசிதாஹம் ச ஸஹாத்மஜா விபோ: "நான் பல ஆபத்தான நிலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டேன், நான் மட்டுமல்ல, என் மகன்களும் சேர்ந்து."

எனவே உண்மை என்னவென்றால், குந்தி அல்லது தேவகி, கிருஷ்ணருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தும்கூட, அவர்கள் பல ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே மற்றவர்களைப் பற்றி என்ன பேசுவது? நம்மைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி என்ன பேசுவது? எனவே நாம் ஆபத்தில் இருக்கும்போது, ​​நாம் சோர்வடையக் கூடாது. குந்தி, வசுதேவர் மற்றும் தேவகியைப் பார்த்துத் தைரியம் பெற வேண்டும், அவர்கள் கிருஷ்ணருடன் மிகவும் நெருக்கமாக இணைந்திருந்தாலும், அவர்கள் ஆபத்தில் இருந்தனர். இந்தப் பௌதீக உலகின் ஆபத்துக்களால் நாம் கலங்கக் கூடாது. நாம் உண்மையில் கிருஷ்ண உணர்வுடன் இருந்தால், நாம் ஆபத்தை எதிர்கொண்டு கிருஷ்ணரை சார்ந்து இருக்க வேண்டும். அவஷ்ய ரகிபே க்ருஷ்ண விஷ்வாஸ பாலன. இது சரணடைதல் என்று அழைக்கப்படுகிறது, "நான் ஆபத்தில் இருக்கலாம், ஆனால் கிருஷ்ணர்... நான் கிருஷ்ணரிடம் சரணடைந்துவிட்டேன். அவர் என்னைக் காப்பாற்ற வேண்டும்." இந்த நம்பிக்கையை வைத்திருங்கள். நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் இந்த உலகம் அப்படி ... பதம் பதம் விபதாம். ஒவ்வொரு அடியிலும் ஆபத்து உள்ளது. நாம் தெருவில் நடப்பது போல. உடனே சில முள், முள் உள்ளது. அந்த முள் குத்தியதால், அது ஒரு கட்டியாக மாறக்கூடும்; அது ஆபத்தானதாக மாறக்கூடும். எனவே தெருவில் நடக்கும் போதும், தெருவில் பேசும்போதும், நம் உணவை உண்ணும் போதும், அங்கே ... மேலும் ஆங்கிலத்தில் "கோப்பைக்கும் உதட்டிற்கும் இடையில் பல ஆபத்துகள் உள்ளன" என்று கூறப்படுகிறது.

எனவே இந்தப் பௌதீக உலகம் வெறுமனே ஆபத்துகளால் நிறைந்துள்ளது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். "நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம்; நாங்கள் மிகவும் நிபுணர்; இந்த உலகத்தை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளோம்," என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நம்பர் ஒன் முட்டாள். பதம் பதம் யத் விபதாம் (ஸ்ரீமத் பாகவதம் 10.14.58). ஆனால் நீங்கள் கிருஷ்ணரிடம் அடைக்கலம் பெற்றால், இந்த ஆபத்துகள் எதுவும் இல்லை. குந்தி சொல்வார், விமோசித. விமோசித என்றால் ஆபத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. அஹம். ஸஹாத்மஜா: "என் ..."

இது கிருஷ்ணர் பற்றிய ஆய்வு. நீங்கள் கிருஷ்ண உணர்வுள்ளவராக இருந்தால், கிருஷ்ணரின் சேவகனாக இருந்தால், இந்தப் பௌதீக உலகின் ஆபத்தான நிலையால் கலக்கமடைய வேண்டாம். நீங்கள் வெறுமனே கிருஷ்ணரை நம்பியிருங்கள், அவர் உங்களைக் காப்பாற்றுவார்.

மிக்க நன்றி.