TA/Prabhupada 0821 - பண்டிதர் என்றால் பட்டம் பெற்றவர் என்பது பொருளல்ல, சமநோக்கு உடையவர் என்பதே பொருள்

Revision as of 07:29, 19 July 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 5.5.3 -- Vrndavana, October 25, 1976

கலியுகத்தில் பிராமணா என்றால் இரண்டு பைசா மதிப்புள்ள பூணூல் என்று மட்டுமே அர்த்தமாகிறது. ஆனால் அது அல்ல பிராமணா. பிராமணா என்றால் ஷமோ தமோ திதிக்ஷா. இவையே அதன் அறிகுறிகள். அதுபோல்தான் மகாத்மா என்பதும் வெறும் ஆடையை குறிப்பதல்ல. ஆனால் மக்கள் இந்த ஆடையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுவிட்டனர். வேஷோபஜிவிபி: (?). இந்தியாவில் இன்னமும் ஏழ்மையான ஒருவன் காவி உடை அணிந்து கொண்டு கிராமங்களுக்குச் சென்று விட்டால் அவனுக்கு எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. அனைவரும் அவனை அழைத்து தங்குமிடம் உணவு மற்றவை கொடுப்பார் கள் . இன்னமும் "ஐயா இங்கே வாருங்கள் பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள்." இன்று அனைவரும் அழைப்பர். இறைமக்கள் இதனை சாதகமாக எடுத்துக் கொண்டுவிட்டனர். எந்தவித கல்வியறிவும் இன்றி, தங்களுடைய பண பிரச்சனையை தீர்ப்பதற்காக இந்த வழியை பயன்படுத்துகின்றனர். இங்கு கூட பிருந்தாவனத்தில் பல இடங்களிலிருந்தும் மக்கள் வந்திருப்பதைப் பார்க்கலாம் ஏனென்றால் இங்கு பல சத்திரங்கள் இருக்கின்றன. இலவசமாக சப்பாத்தியும் பருப்பும் கிடைக்கின்றன. மிகவும் தாழ்த்தப்பட்ட பலரையும் காலை வேளைகளில் இங்கு காணலாம், உணவுக்காக மட்டுமே அவர்கள் பிருந்தாவனத்திற்கு வந்திருக்கின்றனர். இங்கு வாங்கி அவர்கள் அதனை பண்டமாற்றம் செய்து விடுகின்றனர். அதனைக் கொண்டு பீடி வாங்குகின்றனர்.

எனவே அனைத்தும் கலியுகத்தில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. ஆனால் சாஸ்திரம் யார் பிராமணன் யார் மகாத்மா என்று வழிமுறையை நமக்கு காட்டுகிறது. ஆக இங்கு ஒரு விதமான மகாத்மாவைப் பற்றி கூறப்பட்டுள்ளது: மஹாந்தஸ் தே ஸம-சித்தா:. அவர்கள் சமமானவர்கள். ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா (ப.கீ. 18.54). ஸம: ஸர்வேஷு பூதேஷு. அவரே மகாத்மா. அவர் பிரம்மனை உணர்ந்தவர், எனவே அவருக்கு வேறுபாடுகள் இல்லை, மனிதனுக்கு மனிதனோ மனிதனுக்கு மிருகமோ...

வித்யா-வினய-ஸம்பன்னே
ப்ராஹ்மணே கவே ஹஸ்தினி
ஷுனி சைவ ஷ்வபாகே ச
பண்டிதா: ஸம-தர்ஷின:
(ப.கீ. 5.18).

பட்டம் பெற்றவருக்கு எல்லாம் பண்டிதன் என்ற பெயர் இல்லை. பண்டிதன் என்றால் ஸம-சித்தா:. சாணக்கிய பண்டிதரும்,

மாத்ரு-வத் பர-தாரேஷு
பர-த்ரவ்யேஷு லோஷ்ட்ர-வத்
ஆத்ம-வத் ஸர்வ-பூதேஷு
ய: பஷ்யதி ஸ பண்டித:.

அவர் ஒரு பண்டிதர். இல்லையேல் அயோக்கியன். மாத்ரு-வத் பர-தாரேஷு. ஒரு பெண்ணைப் பார்த்த உடனேயே, தன் மனைவி அல்லாத மற்றவரை, "தாய்" என்று அழைக்க வேண்டும். அதுவே பண்டிதம். அடுத்த பெண்களுடன் ரகசியமாக பேசுபவன் அயோக்கியன். எனவே மாத்ரு-வத் பர-தாரேஷு பர-த்ரவ்யேஷு லோஷ்ட்ர-வத்: அடுத்தவர் பொருளை தொடக்கூடாது. குப்பையை ஒருவரும் தொடுவதில்லை. ஆனால் அதிர்ஷ்ட மற்ற மக்கள். நான் ஹாங்காங்கில் பார்த்திருக்கிறேன், அந்த குப்பையிலிருந்து நாய்களைப் போல உணவை பொறுக்கி எடுத்துக் கொள்வர். நான் பார்த்து இருக்கிறேன். ஒருவர் விட்டெறியும் உணவை பொறுக்கி கொள்வர். அத்தகைய மக்கள் துரதிஷ்டவாதிகள். குப்பையை ஒருவரும் தொடுவதில்லை. ஆனால் கலியுகத்தில் குப்பையைக் கிளறி காகிதம், துணி போன்றவற்றை பொறுக்கி அதனை தொழிலாக செய்கின்றனர். குப்பை தொடுவதற்கு உகந்ததல்ல, ஆனால் கலியுகத்தில் துரதிஷ்டமாக மக்கள் குப்பையில் இருந்தும் மதிப்புள்ள பொருட்களை பொறுக்கி எடுக்கின்றனர்.

எப்படியோ மகாத்மாகளுக்கு இதுவே அறிகுறி. சம சித்தம். அவர்கள் இதுபோல எண்ணுவதில்லை, " ஓ! இவன் ஒரு இந்து, இவன் ஒரு முசல்மான், இவன் பணக்காரன், இவன் ஏழை" இல்லை. அவன் அனைவருடனும் இறக்கமாக இருக்கிறான். அது இறைத்தன்மை.