TA/Prabhupada 0820 - குருவானவர் எதை சொன்னாலும், அதனை யாதொரு விவாதமுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்
Lecture on SB 5.5.2 -- Vrndavana, October 24, 1976
நீங்கள் உண்மையில் தவம் செய் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் ஒரு நபரைத்தான் அணுக வேண்டும். அவரும் முன்பே தவம் செய்தவராக இருக்க வேண்டும். தபோ திவ்யம் (ஸ்ரீ.பா. 5.5.1) இங்கு அனைத்தும் கிடைக்கும். மகத் ஸேவாம். அங்கு நீங்கள் உங்கள் சேவையை செய்ய வேண்டும். தாழ்மையுடன் சேவை செய்ய வேண்டும். ஸேவயா. ப்ரணிபாத் மற்றும் சேவையின் மூலமாகத்தான் மகாத்மாகளை கேள்வி கேட்க முடியுமே தவிர அகங்காரத்துடன் அல்ல. கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இல்லை. ரூப கோஸ்வாமியிடன் இந்த மனிதர் சென்றது போல். அவருக்கு நேரத்தை வீணடிக்கும் உரிமையும் இல்லை.
எனவே இந்த பேச்சுவார்த்தை, பரிந்துரை, எல்லாம் சரணடைந்த சிஷ்யனுக்கும் குருவிற்கும் இடையில்தான் நடைமுறைப்படும். இல்லையேல் அதற்கான தேவையே இல்லை. தற்போது நாம் சில கூட்டங்கள் நடத்துகிறோம். சாதாரண மனிதர்கள் கேட்பதற்கு வருகிறார்கள். ஆனால் அத்தகைய உரையாடல்களை சைதன்ய மஹாபிரபு ஒருபோதும் நடத்தியதில்லை. இந்த வெளியாட்கள் பணிவுடன் இருப்பதில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக வருகிறார்கள் கற்பதற்காக அல்ல. எனவே சைதன்ய மஹாபிரபு பெரும் கூட்டங்கள் எல்லாம் நடத்தியதில்லை. பெரும் கூட்டங்களில் அவர் இருந்தார் ஆனால் அவை எல்லாம் கீர்த்தனங்கள், சங்கீர்தனங்கள். தினமும் 4 மணி நேரம் மாலை வேளைகளில் ஜெகநாதர் கோவிலுக்கு வெளியே பெரும் கூட்டம் நடத்தினார், ஆனால் அத்தனை மணிநேரமும் அவர் ஹரே கிருஷ்ணா ஜெபம் செய்தார். ஆனால் சர்வ பெளம பட்டாச்சாரியா, பிரகாஷ் ஆனந்த சரஸ்வதி, ராமானந்த ராயா போன்ற உயர்ந்த ஆத்மாக்கள் உடன் அவர் கலந்தாலோசிப்பது உண்டு. இல்லையேல் அவர் ஒருபோதும் கலந்துரையாடல் செய்ததில்லை. உரையாடலுக்கு வேலை இல்லை, ஏனெனில் அவர்கள் பணிவுடன் இருப்பதில்லை. அவர்கள் கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் போல எண்ணினார்கள். கிருஷ்ணரை தன் நண்பன் என்று அர்ஜுனன் நினைத்தவரை. அவருக்கு சரிசமமாக பதில் சொல்லலாம் என்று நினைத்தவரை பகவான் கிருஷ்ணர் கடுமையாகத்தான் பேசினார். இந்த வகையான பேச்சுக்களால் ஒரு பலனும் இல்லை என்று அர்ஜுனன் உணர்ந்த பின்னர் அவன் கிருஷ்ணருடைய சீடன் ஆனான்: ஷிஷ்யஸ் தே 'ஹம் ஷாதி மாம் ப்ரபன்னம் (ப.கீ 2.7). "இனி எந்த உரையாடலுக்கும் இடம் இல்லை உன்னை நான் என் குருவாக ஏற்றுக் கொள்கிறேன்."
குரு என்றாலே அவர் என்ன பரிந்துரை செய்கிறாரோ, அதனை எந்த மறுப்பேச்சும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். வேத ஞானம் அப்படிப்பட்டது. அதற்கு நீ விளக்கம் கொடுக்க முடியாது அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுபோல்தான் குருவின் வார்த்தைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். வாதத்திற்கு இடமில்லை. அதுவே வேத ஞானம். அதுவே வேத முறை. இந்த உதாரணத்தை நாம் பலமுறை கூறியிருக்கின்றோம்: மாட்டுச்சாணம். மாட்டுச்சாணம் ஒரு மிருகத்தின் கழிவு தான். மிருகத்தின் கழிவு மிகவும் அசுத்தமானது. நம் கழிவை கூட தொட்டால்... நீ பெரும் படித்த பண்டிதனாக, பக்தனாகவும் இருக்கலாம் அதற்காக நீ உனது கழிவை தொட்டுவிட்டாலும் தூய்மையாகவே இருப்பாய் என்று ஆகாது. நீ உடனடியாக குளிக்க வேண்டும். நம் கழிவுக்கு அப்படி என்றால் அடுத்தவர்களைப் பற்றி என்ன சொல்ல. ஆனால் வேத பரிந்துரைகளின் படி மாட்டுச் சாணம் மிருகத்தின் கழிவாக இருந்தால்கூட, மனிதனை விட திறமையான மிருகம்தான் அது தூய்மையானது என்று சொல்லப்படுகிறது. அதன் தூய தன்மையை ஏற்று கொள்ள வேண்டும். வாதம் செய்ய கூடாது. "இந்த மலமானது அசுத்தமானது. என் ஆன்மீக குருவின் மலம் கூட அசுத்தமானது தான். பசுவின் சாணம் மட்டும் எப்படி தூய்மையாகி விடும்? அது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதற்காக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோலத்தான் சங்கு, அது ஒரு மிருகத்தின் எலும்பு. ஒரு சவத்தின் எலும்பை தொட்டுவிட்டால் உடனடியாக தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த எலும்போ சுவாமி அறையில் வைக்கப்படுகிறது. இந்த சங்கினை கொண்டு நாதம் எழுப்புகிறோம் - ஏனெனில் அது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இதில் வாதத்திற்கு இடமில்லை. வேத பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டால், அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.