TA/Prabhupada 0828 - எவரொருவர் தனது உடனிருப்போர் நலனில் கவனம் கொள்கிறாரோ - அவர் குரு ஆவார்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0828 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0827 - Acarya's Duty is to Point Out the Sastric Injunction|0827|Prabhupada 0829 - The Four Walls Will Hear You Chant. That is Sufficient. Don't be Disappointed|0829}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0827 - ஆச்சாரியரின் கடமை சாஸ்திர போதனைகளை சுட்டிக்காட்டுவதாகும்|0827|TA/Prabhupada 0829 - நீங்கள் ஜெபிப்பதை நான்கு சுவர்கள் கேட்கின்றன - இதுவே போதுமானது - ஏமாற்றம் கொள்ளாதீர்|0829}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:26, 4 August 2021



Lecture on SB 5.5.18 -- Vrndavana, November 6, 1976

பிரத்யும்ன: மொழிபெயர்ப்பு: "தன்னைச் சார்ந்தவர்களை பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுவிக்க முடியாதவர் ஆன்மீக குருவாகவோ, தந்தையாகவோ, கணவனாகவோ, தாயாகவோ, வழிபாட்டிற்குரிய தேவராகவோ ஆகுதல் கூடாது."

பிரபுபாதர்:

குருர் ந ஸ ஸ்யாத் ஸ்வ-ஜனோ ந ஸ ஸ்யாத்
பிதா ந ஸ ஸ்யாஜ் ஜனனீ ந ஸ ஸ்யாத்
தைவம் ந தத் ஸ்யான் ந பதிஷ் ச ஸ ஸ்யான்
ந மோசயேத் ய: ஸமுபேத-ம்ருத்யும்
(ஸ்ரீ.பா. 5.5.18)

சென்ற ஸ்லோகத்தில் விளக்கப்பட்டிருந்தது, அதாவது கஸ் தம் ஸ்வயம் தத்-அபிஜ்ஞோ விபஷ்சித் (SB 5.5.17). பாதுகாப்பவர் அபிஜ்ஞோ விபஷ்சித் பண்டிதராக இருக்கவேண்டும். அரசாங்கம், தந்தை, குரு, ஆசிரியர் மற்றும் கணவன் கூட... நாம் ஒருவரால் வழிநடத்த படுகிறோம், அனைவருமே மற்ற ஒருவரால் வழி நடத்தப்படுகின்றனர். அதுதான் சமூகம் என்பது. நாய்களும் பூனைகளும் போன்றதல்ல. நாய்களும் பூனைகளும் இனப்பெருக்கம் செய்கின்றன ஆனால் அதன் பின்பு அவற்றுக்கு எந்த பொறுப்பும் இல்லை. நாய்கள் தெருவில் சுற்றித் திரிகின்றன, ஒருவரும் பராமரிப்பதில்லை. ஆனால் மனித சமுதாயம் அப்படி இருக்க முடியாது. பொறுப்பான பாதுகாவலர்கள் இருக்க வேண்டும். சில பொறுப்பான பாதுகாவலர்களை தான் இங்கு குறிப்பிட்டுள்ளனர். முதலில் குரு. பள்ளி கல்லூரிகளில் இருக்கும் சாதாரண ஆசிரியரை எடுத்துக்கொண்டால் கூட, அவர்களுக்கும் பெயர் குருதான், மிக உயர்ந்த குருவானவர் ஆன்மீக குரு. ஆன்மீக குரு மட்டுமல்ல, யாரொருவர் குருவின் பதவியை ஏற்று மற்றவருக்கு கற்றுத்தர விழைகிறாரோ, அவரும் நன்கு படித்தவராகவும், பொறுப்புள்ளவராகவும் இருக்க வேண்டும். விபஷ்சித், அபிஜ்ஞோ. அபிஞாத இது முழுமுதற்கடவுளான தகுதி. ஸ்ரீமத் பாகவதத்தின் தொடக்கத்தில் அபிஞாத கூறப்பட்டுள்ளது போல. ஜன்மாத்யஸ்ய யத: 'ந்வயாத் இதரதஷ் ச அர்தேஷு அபிஜ்ஞ: (ஸ்ரீ.பா. 1.1.1). அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் அபிஞாதமாக இருக்க வேண்டும். அதே தான் இதுவும். நாம் கடவுளுக்கு நிகரான அபிஞாதமாக இருக்க முடியாது அது சாத்தியமில்லை - ஆனால் அந்த பண்பு அபிஞாத சிறிதேனும் நம்மிடம் இருக்க வேண்டும். இல்லையேல் அதனால் பயன் என்ன?

குருவைப் பற்றி முதலில் சொல்லப்படுகிறது என்றால் தனக்கு கீழே உள்ளவரை கவனித்துக் கொள்ள வேண்டும் அவரே குரு. குரு ஆகுவதற்கு முதல் தகுதியானது நம்மைச் சார்ந்த உள்ளவர்களை பிறப்பு இறப்பு சூழலிலிருந்து எப்படி விடுவிப்பது என்று அறிந்து இருப்பதுதான். அதுவே முதல் கேள்வி. "நான் உன்னுடைய குரு உன்னுடைய வயிற்று வலியை நான் போக்குகிறேன்" என்பதல்ல. இந்த தேவைக்காக கூட குருவிடம் செல்கிறார்கள். மக்கள் பொதுவாக குருவிடம் செல்கின்றனர் அயோக்கியர்களும் அயோக்கியத்தனமான குருக்களிடம் செல்கின்றனர். அப்படி என்றால் என்ன? "ஐயா எனக்கு ஏதோ ஒரு வழி இருக்கிறது. அந்த வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு என்னை ஆசீர்வதியுங்கள்." "ஆனால் இங்கே ஏன் வந்திருக்கிறாய் அயோக்கியனே, உன்னுடைய வயிற்று வலியைப் போக்கி கொள்ளவா?" நீ மருத்துவரிடம் சென்று இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு மாத்திரையை உட்கொண்டு இருக்கலாம். குருவை வந்து சந்திப்பதற்கு அதுவா காரணம்? பொதுவாக குருவிடம் வந்து ஏதாவது பௌதிக பயனையே ஆசீர்வாதமாக கேட்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் அயோக்கியர்கள். அவர்களுக்கு என்று கிருஷ்ணர் அயோக்கியத்தனமான குருவையே அளிக்கிறார். ஏமாற்றப்பட விரும்புகின்றனர். குருவிடம் செல்வதற்கான காரணத்தை அவர்கள் அறிவதில்லை. அவர்களுக்குத் தெரியாது. தன்னுடைய வாழ்க்கையின் பிரச்சனை என்ன என்பது அவர்களுக்கு தெரியாது குருவிடம் ஏன் செல்ல வேண்டும் அதுவும் அவர்களுக்கு தெரியாது. குருக்கள் என்று சொல்லப்படுபவர்கள் பொதுமக்களின் இந்த அறியாமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர், குருவாகி விடுகின்றனர். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குருவுக்கு தன் கடமை என்ன என்று தெரிவதில்லை முட்டாள்தனமான பொதுமக்களுக்கு, எதற்காக குருவிடம் செல்ல வேண்டும் என்றே தெரிவதில்லை. அதுதான் பிரச்சனை.