TA/Prabhupada 0827 - ஆச்சாரியரின் கடமை சாஸ்திர போதனைகளை சுட்டிக்காட்டுவதாகும்



The Nectar of Devotion -- Vrndavana, November 5, 1972

சைதன்ய மகாபிரபு நமக்கு கொடுத்திருக்கிறார்.... அது சாஸ்திரத்தில் இருக்கிறது. சைதன்ய மஹாபிரபு குறிப்பிடுகிறார்.... ஆச்சாரியர்களின் கடமை.... அனைத்தும் சாஸ்திரங்களில் இருக்கிறது. ஆச்சாரியர் எதையும் உருவாக்குவதில்லை. அது ஆச்சாரியர் அல்ல. ஆச்சார்யர் வெறுமனே சுட்டிக்காட்டுகிறார், "இதுதான் பொருள்" என்று. இரவு நேரம் இருட்டில் நாம் எதையும் சரியாக பார்க்க முடியாது ஆனால் சூரியன் எழுந்தவுடன், சூரிய ஒளியினால், உள்ளதை உள்ளது போல காண முடியும் அதுபோல. விஷயங்கள் உருவாக்கப்படுவதில்லை. அவை ஏற்கனவே இருக்கின்றன. வீடுகள், நகரங்கள், அனைத்தும் இருக்கின்றன சூரியன் எழும் பொழுது அவை தெரிய வருகின்றன. அதுபோலதான் ஆச்சாரியார் அல்லது அவதாரம், அவர் எதையும் உருவாக்குவதில்லை. உள்ளதை உள்ளபடி காண்பதற்கு வெளிச்சம் அளிக்கிறார். சைதன்ய மஹாபிரபு பிரகத் நாரதீய புராணத்திலிருந்து இந்த ஸ்லோகத்தை குறிப்பிடுகிறார். இந்த ஸ்லோகம் பிரகத் நாரதீய புராணத்தில் ஏற்கனவே உள்ளது.

ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாம இவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா
(சி.சி. ஆதி 17.21).

கலியுகத்தின் செயல்களின் அறிகுறியாக இந்த ஸ்லோகம் பிரகத் நாரதீய புராணத்தில் ஏற்கனவே இருந்தது. சைதன்ய மகாபிரபு இதனை எடுத்துச் சொல்கிறார். அவர் கிருஷ்ணருடைய அவதாரமாக இருந்தாலும் - அவர் எத்தனையோ விஷயங்களை உருவாக்கி இருக்கலாம் - ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதுதான் ஆசாரியனுக்கு அழகு. ஆச்சார்யன் எந்தவிதமான புது தர்மத்தையும் உருவாக்குவதில்லை, எந்த ஒரு புது வாக்கியமாக ஹரே கிருஷ்ண மந்திரம் போன்றவற்றை உருவாக்குவதில்லை. அது சக்தி உள்ளதாக இருக்காது. வெறுமனே... ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே இது சாஸ்திரத்தில் இருக்கின்றது. அதனால் இது வலுவானது. இந்தப் பதினாறு அக்ஷரங்கள் இல் எதையாவது நாம் கூட்டிக் குறைத்து சொன்னால் அது எனது உருவாக்குதல் ஆகிவிடும். அதற்கு வலு இருக்காது. அதனை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இந்த ஹரே கிருஷ்ணா உடன் ஏதாவது ஒரு வரியை கூட்டினால் அவர்கள் தனியாக குறிப்பிடப் படுவார்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அது முழுவதையும் கெடுத்துவிடும். அதாவது அவர்கள் எதையும் புதிதாக உருவாக்குவதில்லை. புதிதாக எதையோ செய்து அவர்கள் முழுவதையும் கெடுத்து விடுகிறார்கள். எனவே சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணராக இருந்தும்கூட அதனை ஒருபோதும் செய்ததில்லை. சாஸ்திரங்களின் குறிப்புகளுக்கு உண்மையாக இருந்தார். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள். அவரே குறிப்பிடுகிறார்: ய: ஷாஸ்த்ர-விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம-காரத: ந ஸித்திம் ஸாவாப்நோதி (ப.கீ. 16.23). சாஸ்திரங்களின் போதனைகளை ஒருவராலும் கைவிட முடியாது என்று குறிப்பிடுகிறார். ப்ரஹ்ம-ஸூத்ர-பதைஷ் சைவ ஹேதுமத்பிர் வினிஷ்சிதை: (ப.கீ. 13.5). என்று கிருஷ்ணர் கூறுகிறார். அவர் கொடுக்கலாம். அவர் சொல்வது எல்லாமே சாஸ்திரம், வேதம். ஆனால் அவரும் கூட, சாஸ்திரங்களின் குறியீடுகளை கொடுக்கிறார்.

எனவே ஆச்சாரியாரின் கடமை சாஸ்திரங்களின் குறியீடுகளை குறிப்பிடுவதாகும். அவை ஏற்கனவே வேதங்களில் இருக்கின்றன. அவரது கடமை... எப்படி பல்வேறு மருந்துகள் இருக்கின்றனவோ, அதுபோல. மருந்துக் கடைக்குச் சென்றால் அங்கு இருப்பதெல்லாம் மருந்து தான், ஆனால் ஒரு அனுபவம் மிக்க மருத்துவன், உனக்குத் பொருத்தமான குறிப்பிட்ட மருந்தை உனக்காக தருவான். அப்போது நாம், "ஏனய்யா தேர்ந்தெடுத்து மருந்து கொடுக்கிறீர்கள்? ஏதோ ஒரு மருந்தை கொடுக்கலாமே" என்று சொல்ல முடியாது. அது முட்டாள்தனம். ஏதோ ஒன்றை தர முடியாது. ஒரு குறிப்பிட்ட உடம்புக்கு, குறிப்பிட்ட மருந்து தான் பொருந்தும், அதை ஒரு தேர்ந்த மருத்துவர் தான் தர முடியும். அவரே ஆச்சாரியர். அதனால், "அனைத்துமே மருந்துதான் நான் எந்த போத்தலை எடுத்துக்கொண்டாலும் என்ன பரவாயில்லை" என்று நாம் சொல்ல முடியாது. இல்லை அப்படி இல்லை. இது நடந்து கொண்டே தான் இருக்கிறது. யத மத தத பத . ஏன், யத மத தத பத? ஒரு குறிப்பிட்ட மத உனக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பொருத்தமாக இருக்கும் ஆனால், அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் மற்ற மத அல்ல. அப்படித்தான் இந்த கலியுகத்திலும், இங்கு மக்களின் ஆயுள் குறைவாக உள்ளது அவர்கள் துரதிஷ்டசாலிகள், மிகவும் மெதுவாக உள்ளனர், அங்கீகரிக்கப்படாத மதக் கொள்கைகளை எடுத்துக்கொள்கின்றனர், வாழ்வின் பல இடையூறுகளுக்கு ஆளாகின்றனர்... எனவேதான் இந்த காலத்திற்கான குறிப்பிட்ட மருந்தாக, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு இதனைக் கூறுகிறார்:

ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா
(சி.சி. ஆதி 17.21).

ப்ரபு கஹே, இஹா ஹைதே ஸர்வ-ஸித்தி ஹைபே தோமார. எனவே சைதன்ய மகாபிரபுவின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ள வேண்டும், அவர் இந்தக் கலியுகத்தில் அவதாரமாகத் தோன்றியவர். கலௌ ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸு-மேதஸ:. இதுவே சாஸ்திரம் சொல்லும் கருத்து.

க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம்
ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர்
யஜந்தி ஹி ஸு-மேதஸ:
(ஸ்ரீ.பா. 11.5.32).

சாஸ்திர கருத்து இதுதான், அதாவது பகவானின் இந்த ரூபம், தன்னுடைய சகாக்களுடன் உள்ள இவர்........ ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம். சைதன்ய மகாபிரபு எப்போதும் ஸ்ரீ அத்வைத பிரபு, ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ கதாதர பிரபு, ஸ்ரீ ஸ்ரீவாச பிரபு ஆகியோருடன் இணைந்து இருக்கிறார். எனவே வழிபாட்டிற்கான முறையாவது ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த. அதுவே சிறந்த வழிமுறை. அதனை குறைக்கக் கூடாது. இல்லை அதில் கூறியுள்ள படி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே ஸ்ரீமத் பாகவதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது க்ருஷ்ண-வர்ணம் த்விஸக்ருஷ்ணம் ஸந்கோபன்கஸ்த்ர... (ஸ்ரீ.பா. 11.5.32). எனவே நாம் பகவான் சைதன்யரை வழிபட வேண்டுமானால் அவருடைய சகாக்களுடன் தான் வழிபடுகிறோம். ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த. அதற்கு எந்தக் குறுக்கு வழியும் இல்லை. அதுவே சாஸ்திரத்தில் அறிவுறுத்தல். எனவே இந்த யுகத்தின் பாவச் செயல்களில் இருந்து விடுபடுவதற்கு, ஏற்கனவே சாஸ்திரங்களில் கூறப்பட்டதும் மாபெரும் ஆச்சாரியரான சைதன்ய மகாபிரபுவினால் அங்கீகரிக்கப்பட்டதுமானது இது. சேதோ-தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம் (CC Antya 20.12, Śrī Śikṣāṣṭakam 1). நாம் அனைவரும் இந்த மகா மந்திர ஜபத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.

மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா.