TA/Prabhupada 0834 - பகவானிடம் மட்டுமே பக்திகொள்

Revision as of 07:27, 4 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 3.25.19 -- Bombay, November 19, 1974

வாழ்க்கையின் பௌதிக முறைகளால் குறைவாக பாதிக்கப்பட வேண்டும், ஜ்ஞான, வைராக்ய மற்றும் பக்தி இந்த தளத்திற்கு ஒருவர் வர வேண்டும். இல்லையெனில் அது சாத்தியமில்லை. அதே செயல்முறை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது: ந யுஜ்யமானயா பக்த்யா பகவதி (SB 3.25.19)... பக்தி, அதை எங்கே பயன்படுத்த வேண்டும்? "எனக்கு பக்தி கிடைத்துள்ளது" என்று ஒருவர் கூறுகிறார். உங்களுக்கு பக்தி கிடைத்த இடம் எங்கே? இப்போது, ​​என் மனைவியிடம் எனக்கு மிகவும் பக்தி உள்ளது. நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். நான் அவளை கவனித்துக்கொள்கிறேன். நான் அவளைக் காணவில்லை என்றால், நான் பைத்தியம் ஆகிறேன்." எனவே இந்த வகையான பக்தி இங்கே விளக்கப்படவில்லை. "எனது குடும்பத்தின் மேல் எனக்கு பக்தி உள்ளது. என் நாட்டின் மேல் பக்தி உள்ளது. துர்கா தேவி மீது எனக்கு பக்தி உள்ளது. பல தேவதைகள் மீது எனக்கு பக்தி உள்ளது..." இல்லை. அந்த வகையான பக்தி அல்ல. எனவே இது குறிப்பாக பக்திய பகவதி என்று கூறப்படுகிறது. பகவதி, "உச்சத்திற்கு ..." என்ன வகையான பகவான்? ​​இப்போதெல்லாம் ஏராளமான பகவான்கள் உள்ளனர். இல்லை, அந்த வகையான போலி பகவான் அல்ல, ஆனால் என்ன வகையானது? அகிலாத்மணி. இந்த போலி பகவானை நீங்கள் கேளுங்கள் "நீங்கள் அகிலாத்மனா? என்று. நீங்கள் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறீர்களா? நான் இப்போது என்ன நினைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? "

எனவே பகவான் என்றால் அவர் அகிலாத்மனாக இருக்க வேண்டும். பகவான் என்று அழைக்கப்படுபவர்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம். எல்லாம் இருக்கிறது. பகவான் என்றால் அகிலாத்மணி என்று பொருள். அவருக்கு தெரியும். கிருஷ்ணர் பகவத்-கீதையில் கூறுகிறார், ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே (ப.கீ 18.61). நீங்கள் ஈஷ்வர என்றால், நீங்கள் அனைவரின் இதயத்திலும் இருக்க வேண்டும். சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்னிவிஷ்ட (ப.கீ 15.15): ஈஷ்வர... கிருஷ்ணர் தான் ஈஷ்வர. எனவே அவர் கூறினார், சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்னிவிஷ்ட "நான் அனைவரின் இதயத்திலும் தங்கியிருக்கிறேன்." ஆகவே, நீங்கள் ஈஷ்வர என்றால், நீங்கள் பகவானாக இருந்தால், நீங்கள் என் இதயத்தில் தங்கியிருக்கிறீர்களா? நான் இப்போது என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? எனவே அகிலத்மணி. எல்லாவற்றையும் மிகவும் ஆராய்ந்து படிக்க வேண்டும். பக்தி என்பது பகவானுக்கு மட்டுமே. "இதற்காக அல்லது அதற்காக என் பக்தி, இந்த தேவதூதருக்கு, அந்த தேவதூதருக்கு,......என்றல்ல, என் குடும்பத்திற்காக, என் நாட்டிற்காக, என் சமூகத்திற்காக, என் மனைவிக்கு, என் பூனைக்கு, என் நாய்க்கு." இது பக்தி அல்ல. அவை சாயல் மட்டுமே. அது காமம். அதுவே ஆசை. அது பக்தி அல்ல. பக்தி என்றால் பகவதி. பகவதி என்றால் அகிலாத்மணி என்று பொருள்.

எனவே அந்த கிருஷ்ண பக்தியை நாம் உருவாக்க முடிந்தால், பக்தி, நம் வாழ்க்கை, வெற்றிகரமான வாழ்க்கை, பிரம்ம-சித்தயே, முழுமையான சுய-உணர்தல் ஆகியவை சாத்தியமாகும். ஆகையால், ஸத்ருஷ: அஸ்தி ஷிவ: பந்தா : "இல்லை. வேறு மாற்று இல்லை." நீங்கள் என்றால் ... ப்ரஹ்ம-ஸித்தயே. பிரம்மன், பர-பிரம்மன் கிருஷ்ணர். பிரம்ம-சித்தயே என்றால் உறவு என்ன என்பதைப் புரிந்துகொள்வது ... "நான் பிரம்மம்." அது சரி. அஹம் பிரம்மஸ்மி. ஆனால் பர-பிரம்மத்துடன் உங்களுக்கு என்ன தொடர்பு? அது பிரம்ம-சித்தயே. பிரம்மன் மற்றும் பர-பிரம்மன், இரண்டு பிரமணர்கள் உள்ளனர். ஏன் இருக்கிறது ...? ஆத்மா மற்றும் பரமாத்மா , ஈஷ்வர மற்றும் பரமேஷ்வர. எனவே ஜீவாத்மாக்கள் மற்றும் புருஷோத்தமர். நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம் (கத உபனிஷத் 2.2.13). இவை வேதத் தகவல்கள். இரண்டு உள்ளன, எப்போதும் இரண்டு. ஆத்மா, பரமாத்மா, பிரம்மன், பரபிரம்மன். எனவே ... மேலும் பிரம்ம-சித்தயே என்றால் "நான் பிரம்மம்" என்று புரிந்து கொள்வது மட்டுமல்ல, ஆனால் பர-பிரம்மனுடனான எனது உறவு என்ன என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும். அது பிரம்ம-சித்தயே. அதாவது பரபிரம்மன் என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த பரபிரம்மன் கிருஷ்ணர்.