TA/Prabhupada 0841 - ஆன்மிக நோக்கில் தோன்றுதலுக்கும் மறைதலுக்கும் இடையே வித்தியாசம் தெரிவதில்லை

Revision as of 07:26, 7 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


731213 - Lecture Festival Disappearance Day, Bhaktisiddhanta Sarasvati - Los Angeles

நம ஓம் விஷ்ணு-பாதா₃ய
க்ருஷ்ண-ப்ரஷ்தா₂ய பூ₄தலே
ஸ்ரீமதே ப₄க்திஸித்₃தா₄ந்த
ஸரஸ்வதீதி நாமிநே

இந்த ஜட உலகத்திலிருந்து ப₄க்திஸித்₃தா₄ந்த ஸரஸ்வதீ டாகுர காலமானார் 31 டிசம்பர், 1936 அன்று. எனவே கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டன. ப்ரகட மற்றும் அப்ரகட, (தோற்றம் மற்றும் மறைவு) என இரண்டு கட்டங்கள் உள்ளன. எனவே மறைவினால் புலம்புவதற்கு நமக்கு எதுவும் இல்லை ஏனெனில் கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணரின் பக்தர்கள்... பக்தர்கள் மட்டுமல்ல, பக்தர் அல்லாதவர்கள் கூட, யாரும் மறைந்து போவதில்லை. யாரும் மறைவதில்லை ஏனெனில் ஒவ்வொரு உயிரினமும் ... கிருஷ்ணரை போல நித்தியமானது இது வேத இலக்கியங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, நித்யோ நித்யாநாம் சேதநஷ்₂ சேதநாநாம் (கட₂ உபநிஷத்₃ 2.2.13). முழுமுதற் கடவுள் பற்றிய விளக்கம் என்னவெனில், அவரும் நித்ய, நித்தியமானவர், அத்துடன் உயிர்வாழிகளும் நித்தியமானவை. ஆனால் அவர் நித்தியமானவர்களில் முதன்மையானவர். நித்யோ நித்யாநாம் சேதநஷ்₂ சேதநாநாம். குணத்தால் கிருஷ்ணருக்கும் உயிர்வாழிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அளவு அடிப்படையில், வேறுபாடு உள்ளது. ஒற்றை எண் 'நித்ய'விற்கும் பன்மை எண் 'நித்ய'விற்கும் என்ன வித்தியாசம்? பன்மை எண் 'நித்ய', ஒற்றை எண் 'நித்ய'விற்கு கீழ்ப்பட்ட நித்திய ஊழியர்கள் ஆவர். எப்படியெனில், நீங்கள் ஒருவருக்கு சேவை செய்ய விரும்பினால், எஜமானரும் உங்களைப் போலவே இருப்பார். அவருக்கும் இரண்டு கைகள், இரண்டு கால்கள் அல்லது ஒரே உணர்வுகள் உள்ளன. அவரும் சாப்பிடுகிறார். எல்லாம் ஒரே மாதிரிதான். ஆனால், வித்தியாசம் இருப்பது எஜமானர் மற்றும் வேலைக்காரன் என்பதில்தான். இல்லையெனில், ஒவ்வொரு விஷயத்திலும் சமமே.

ஆன்மீக ரீதியாக, தோற்றம் மற்றும் மறைவில், எந்த வித்தியாசமும் இல்லை. எப்படியெனில், ஜடப் பார்வையின்படி, ஒருவர் பிறக்கிறார் என்றால்... உங்களுக்கு ஒரு மகன் பிறந்தான் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் மிகவும் மகிழ்வடைவீர்கள். அதே மகன், காலமானால், ​​நீங்கள் மிகவும் துக்கமடைகிறீர்கள். இதுவே பௌதிகம். ஆன்மீக ரீதியில், தோற்றம் மறைவு என்ற வேறுபாடு எதுவும் இல்லை. இது ஓம் விஷ்ணுபாத₃ ஸ்ரீ ஸ்ரீமத்₃ ப₄க்திஸித்₃தா₄ந்த ஸரஸ்வதீ டா₂குர அவர்கள் மறைந்த நாள் என்றாலும், புலம்புவதற்கு எதுவுமில்லை. நாம் பிரிவினை உணர்ந்தாலும், அந்த உணர்வு இருக்கவே செய்யும், ஆனால் ஆன்மீக ரீதியில், தோற்றத்திற்கும் மறைவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நரோத்தம தாஸ டாகுரவின் பாடல் ஒன்று உள்ளது, யே அநிலோ ப்ரேம-த₄ந. உங்களில் யாருக்காவது தெரியுமா? அந்தப் பாடலை யாராவது பாட முடியுமா? யே அநிலோ ப்ரேம-த₄ந, கருணா ப்ரசுர, ஹேநோ ப்ரபு₄ கோதா₂ கே₃லோ. முழு பாடலும் எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அதுவே எங்கள் புலம்பல், அது ... ஸ்ரீல ப₄க்திஸித்₃தா₄ந்த ஸரஸ்வதீ டா₂குர இந்த செய்தியை எல்லா இடங்களிலும் பரப்புவதற்கு கொண்டு வந்தார்... நிச்சயமாக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார், அதாவது

ப்ருதி₂வீதே ஆசே₂ யத நக₃ராதி₃-க்₃ராம
ஸர்வத்ர ப்ரசார ஹைபே₃ மோர நாம.

அவர் எதிர்வு கூறினார் "உலகம் முழுவதுமுள்ள, பல நகரங்களிலும் கிராமங்களிலும், எல்லா இடங்களிலும் என் நாமம் அறியப்படும். "ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பெயர். அது இப்போது முயற்சிக்கப்பட்டுள்ளது, அது உண்மையில்... ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற, அவரே நேரடியாகக் கூறினார்,

பா₄ரத பூ₄மீதே மநுஷ்ய ஜந்ம ஹைல யார
ஜந்ம ஸார்த₂க கரி கர பர-உபகார
(CC Adi 9.41).

ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் உலகம் முழுவதிலும் அவருடைய நாமம் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அதை யார் நிறைவேற்றுவார்கள்? அதற்கு அவர் கூறினார் பாரத-வர்ஷ - இந்தியாவில் பிறந்த எவரும், இது அவரது கடமை: முதலில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தத்துவத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்; பின்னர் அதை பரப்பவும், விநியோகிக்கவும். இது ஒவ்வொரு இந்தியரின் கடமையாக இருந்தது. இந்தியர், குறிப்பாக இந்தியாவில், அவர்களுக்கு வேத இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற நாடுகளில் அத்தகைய வாய்ப்பு இல்லை. எனவே யாராவது தனது வாழ்க்கையை பக்குவப்படுத்த விரும்பினால், இந்திய ஆன்மீக அறிவின் பரந்த புதையலை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்