TA/Prabhupada 0850 - உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடுங்கள்

Revision as of 06:26, 20 July 2016 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0850 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

750620d - Lecture Arrival - Los Angeles

நமக்கு புதிய கண்டறிதல் இல்லை. (சிரிப்பு) நாம் உற்பத்தி செய்வதில்லை. இதுதான் நம் செய்முறை. நாம் வெறுமனே முன்னோர்களின் வழி முறைகளை பின்பற்றுகிறோம், அவ்வளவுதான். நம் இயக்கம் மிகவும் சுலபமானது ஏனென்றால் நாம் எதையும் உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. நாம் வெறுமனே முன்னோர்களின் வார்த்தைகளையும் வழி முறைகளையும் மீண்டும் பின்பற்றுகிறோம். கிருஷ்ணர் பிரம்மாவிற்கு போதித்தார், பிரம்மா நாரதருக்கு போதித்தார், நாரதர் வியாசருக்கு போதித்தார், வியாசர் மத்வாச்சாரியருக்கு போதித்தார், மேலும் இவ்வழியாக, பிறகு மாதவெந்தர, ஈஸ்வரபுரீ, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பிறகு ஆறு கோஸ்வாமீகள், அதன் பிறகு ஸ்ரீநிவாஸ ஆச்சாரிய, கவிராஜ கோஸ்வாமீ, நரோத்தம தாஸ் தாகுர, விஸ்வநாத சக்ரவர்தீ, ஜகன்நாததாஸ பாபாஜீ, பக்திவிநோத தாகுர், கெளரகிஷோர் தாஸ் பாபாஜீ, பக்தி சித்தாந்த சரஸ்வதீ, அதன் பிறகு நாமும் அதே காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் வரையறுக்கப்பட்ட விதிமுறை. நீங்கள் தினமும் பாடுகிறீர்கள், குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கோரியா அய்க்ய ஆர் நா கோரிஹோ மனே ஆஷா. மிகவும் எளிமையான காரியம். உன்னதமான அறிவை நாம் குரு-பரம்பரா வழி பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆகையால் நாம் வெறுமனே குருவிடமிருந்து விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு, மேலும் அதை நம் மனதில் செயல்படுத்தினால், அதுதான் வெற்றி. அதுதான் நடைமுறை. எனக்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை, ஆனால் நான் வெறுமனே என் குரு திருப்தியடைய முயற்சிக்கிறேன், அவ்வளவுதான். என் குரு மஹாராஜ் என்னிடம் கேட்டார் அதாவது "உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், நீங்கள் புத்தகங்கள் அச்சிடுங்கள்." ஆகையால் அங்கே ஒரு அந்தரங்க கூட்டம், பேசிக் கொண்டிருந்தது, இது ராதாகுண்டில் நடந்தது. என்னுடைய சில முக்கியமான ஞான-சகோதரர்களும் அங்கிருந்தனர். ஆகையால் குரு மஹாராஜ் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார் அதாவது "நமக்கு இந்த பக்பஸார் பெரிய பளிங்கு கோயில் கிடைத்ததிலிருந்து, அங்கு பல கருத்து முரண்பாடு நிலவுகிறது, மேலும் யார் இந்த அறை, அல்லது அந்த அறை, அந்த அறையை நிரப்புவது என்று ஒவ்வொருவரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால், இந்த கோயிலையும் பளிங்கையும் விற்றுவிட்டு சில புத்தகங்கள் அச்சிட, நான் விரும்புகிறேன்." ஆம். ஆகையால் அவர் வாயிலிருந்தே நான் இதை அறிந்துக் கொண்டேன், அதாவது அவர் புத்தகப் பிரியர் என்று. மேலும் அவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறினார் அதாவது "உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடுங்கள்." ஆகையினால் நான் இந்த கருத்தை வலியுறுத்துகிறேன்: "புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே?" ஆகையால் தயவுகூர்ந்து எனக்கு உதவி புரியுங்கள். இதுதான் என் வேண்டுகோள். இயன்ற அளவில் புத்தகங்களும், பல மொழிகளிலும் அச்சடித்து, உலகமெங்கும் வினியோகம் செய்யுங்கள். பிறகு கிருஷ்ண பக்தி இயக்கம் தானே இயங்கி விரிவடையும். இப்போது கற்றவர்கள், அறிவாளிகள், அவர்கள் நம் இயக்கத்தை பாராட்டுகிறார்கள், புத்தகங்களை படிப்பதன் மூலமும், நடைமுறை முடிவுகளை ஏற்றுக் கொண்டும். டாக்டர் ஸ்டில்ஸன் ஜூடா, அவர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார், ஒருவேளை உங்களுக்குத் தெரியும், கிருஷ்ண உணர்வு..., ஹரே கிருஷ்ணாவும் மாறான பண்பாடும், நம் இயக்கத்தைப் பற்றி ஒரு அருமையான புத்தகம், மேலும் அவர் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். அவர் ஒப்புக்கொள்கிறார் அதாவது, "சுவாமிஜி, நீங்கள் ஆச்சரியமான காரியம் செய்திருக்கிறீர்கள் ஏனென்றால் போதைக்கு அடிமையான நாடோடிகளை கிருஷ்ண பக்தர்களாக மாற்றிவிட்டீர்கள், மேலும் அவர்கள் மனிதாபிமான தொண்டிற்கு தயாராக இருக்கிறார்கள்."