TA/Prabhupada 0850 - உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடுங்கள்



750620d - Lecture Arrival - Los Angeles

உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடுங்கள் நமக்கு புதிய கண்டிபிப்பு ஏதும் இல்லை. (சிரிப்பு) நாம் உற்பத்தி செய்வதில்லை. இதுதான் நம் செயல்முறை. நாம் வெறுமனே முன்னோர்களின் உபதேசங்களைப் பின்பற்றுகிறோம், அவ்வளவுதான். நம் இயக்கம் மிகவும் சுலபமானது, ஏனென்றால் நாம் எதையும் உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. நாம் வெறுமனே முன்னோர்களின் வார்த்தைகளையும் உபதேசங்களையும் மீண்டும் கூறுகிறோம். கிருஷ்ணர் பிரம்மருக்கு உபதேசித்தார், பிரம்மர் நாரதருக்கு உபதேசித்தார், நாரதர் வியாசதேவருக்கு உபதேசித்தார், வியாசதேவர் மத்வாச்சாரியருக்கு உபதேசித்தார், மேலும் இவ்வழியாக, பிறகு மாதவேந்திர புரி, ஈஸ்வர புரி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பிறகு சத்கோஸ்வாமிகள், அதன் பிறகு ஸ்ரீநிவாஸ ஆச்சாரியர், கவிராஜ கோஸ்வாமி, நரோத்தம தாஸ தாகுரர், விஸ்வநாத சக்ரவர்த்தி, ஜகன்நாத தாஸ பாபாஜீ, பக்திவிநோத தாகுரர், கெளரகிஷோர தாஸ பாபாஜீ, பக்தி சித்தாந்த சரஸ்வதி, அதன் பிறகு நாமும் அதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் குறிப்பான செயல்முறை. நீங்கள் தினமும் பாடுகிறீர்கள், குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கோரியா அய்க்ய ஆர் நா கோரிஹோ மனே ஆஷா. மிகவும் எளிமையானது. ஆன்மீக அறிவை நாம் குரு-பரம்பரை வழியாக பெறுகிறோம். ஆகையால் நாம் வெறுமனே குருவிடமிருந்து உபதேசங்களை ஏற்றுக் கொண்டு, அதை நாம் நேர்மையாக முழு முயற்சியுடன் செயல்படுத்தினால், அதுதான் வெற்றி. அது நடைமுறையானது. எனக்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை, ஆனால் நான் வெறுமனே என் குருவை திருப்திப்படுத்த முயல்கிறேன், அவ்வளவுதான். என் குரு மஹாராஜர் என்னிடம் கூறினார், "உனக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்களை அச்சிடு" என்று. ஒரு தனியான சந்திப்பில், பேசிக் கொண்டிருந்தோம், இது ராதாகுண்டத்தில் நடந்தது. என்னுடைய சில முக்கியமான ஆன்மீக சகோதரர்களும் அங்கிருந்தனர். குரு மஹாராஜர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார், "நமக்கு இந்த பக்பஸார் பளிங்கு கோயில் கிடைத்ததிலிருந்து, பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன, யாருக்கு இந்த அறை, யாருக்கு அந்த அறை என்று ஒவ்வொருவரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், இந்த கோயிலையும் பளிங்கையும் விற்றுவிட்டு சில புத்தகங்களை அச்சிட நான் விரும்புகிறேன்." ஆம். அவர் வாயிலிருந்தே நான் இதை கேட்டேன், அதாவது அவர் ஒரு புத்தகப் பிரியர் என்று. மேலும் அவர் என்னிடம் நேரடியாக கூறினார், "உனக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடு" என்று. ஆகையால் நான் இந்த கருத்தை வலியுறுத்துகிறேன்: "புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே?" ஆகையால் தயவுகூர்ந்து எனக்கு உதவுங்கள். இதுதான் என் வேண்டுகோள். இயன்றளவில் பல புத்தகங்களை பல மொழிகளில் அச்சிட்டு உலகெங்கும் விநியோகம் செய்யுங்கள். பிறகு கிருஷ்ண பக்தி இயக்கம் தானே விரிவடையும். இப்போது கற்றவர்கள், அறிஞர்கள் நம் இயக்கத்தை பாராட்டுகிறார்கள், புத்தகங்களை படிப்பதன் மூலமும், நடைமுறையில் காணும் விளைவுகளைக் கொண்டும். டாக்டர் ஸ்டில்ஸன் ஜூடா, அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார், ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஹரே கிருஷ்ணாவும் மாற்றுப் பண்பாடும், நம் இயக்கத்தைப் பற்றியதொரு அருமையான புத்தகம், அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர் ஒப்புக்கொள்கிறார், "சுவாமிஜி, நீங்கள் ஆச்சரியமான காரியம் செய்திருக்கிறீர்கள் ஏனென்றால் போதைக்கு அடிமையான ஹிப்பிக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்றிவிட்டீர்கள், அவர்கள் மனிதநேய தொண்டிற்கு தயாராக இருக்கிறார்கள்."