TA/Prabhupada 0919 - கிருஷ்ணருக்கு எந்த எதிரியும் இல்லை. கிருஷ்ணருக்கு எந்த நண்பனும் இல்லை. அவர் பூரண சுதந்

Revision as of 07:34, 7 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730421 - Lecture SB 01.08.29 - Los Angeles

பிரபுபாதர்: எனவே நீங்கள் கிருஷ்ணரை, காம ஆசை பிடித்தவர் என்றோ உணர்ச்சிவசப்பட்ட அவர் என்றோ குற்றம்சாட்ட முடியாது . இல்லை. அவர் தன்னுடைய எல்லா பக்தர்கள் மீதும் கருணை காட்டினார். கிருஷ்ணரின் பல பக்தர்கள் இருக்கிறார்கள். ஒரு பக்தை, கிருஷ்ணரை தன் கணவர் ஆகுமாறு வேண்டினாள். ஒரு பக்தர் கிருஷ்ணரை தன் நண்பர் ஆகுமாறு வேண்டினார். ஒரு பக்தர் கிருஷ்ணரை தன் குழந்தை ஆகுமாறு வேண்டினாள். மேலும் ஒரு பக்தர் அவரை தன் விளையாட்டுத் தோழன் ஆகுமாறு வேண்டுகிறார். இந்த வகையில், இந்த பிரபஞ்சம் எங்கும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள். மேலும் கிருஷ்ணர் அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும். அவருக்கு பக்தர்களிடம் இருந்து எந்த உதவியும் தேவையில்லை. ஆனால் பக்தர்கள் விரும்புவதைப் போல...... இந்தப் 16,000 பக்தர்களும் கிருஷ்ணர் தங்கள் கணவராக வேண்டும் என்று விரும்பினார்கள். கிருஷ்ணர் ஒப்புக்கொண்டார் இது..... ஒரு சாதாரண மனிதனைப் போல ஆனால் அவர் கடவுள் என்பதால், தன்னை 16,000 உருவங்களாக விரிவுபடுத்திக் கொண்டார்.

நாரதர் அவரைப் பார்க்க வந்தார், "கிருஷ்ணர் 16,000 மனைவியரை மணந்து கொண்டுள்ளார். அவர்களிடம் அவர் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார், நான் அதனைப் பார்க்க வேண்டும்." எனவே அவர், இங்கு வந்தபோது, அவர் 16,000 மாளிகைகளில் கிருஷ்ணர் வெவ்வேறு விதமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தார். ஒரு இடத்தில் அவர் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார், ஒரு இடத்திலோ அவர் தன் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு இடத்தில் அவர் தன் மகன் மற்றும் மகள்களின் திருமண வைபவத்தை நடத்திக் கொண்டிருந்தார். இப்படி பல வகைகளில், 16 ஆயிரம் வகைகளில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதுதான் கிருஷ்ணர். கிருஷ்ணர்.... அதாவது அவர் ஒரு சாதாரண குழந்தையைப் போல விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், அன்னை யசோதை அவர் மண்ணை உண்டாரா என்று அவருடைய வாயை திறந்து பார்க்க விரும்பியபோது, அவர் தன் வாயினுள் எல்லா பிரபஞ்சங்களையும் காட்டினார். இதுதான் கிருஷ்ணர். அவர் ஒரு சாதாரண குழந்தையைப் போல விளையாடிக் கொண்டிருந்தாலும், தேவை ஏற்படும் போது, அவர் தன்னுடைய இறைத்தன்மையை காட்டினார்.

அர்ஜுனனிடம் காட்டியதைப் போல. அவர் தேர் ஓட்டிக் கொண்டிருந்தார், ஆனால் அர்ஜுனன் அவருடைய விஸ்வரூபத்தை பார்க்க விரும்பிய போது, உடனேயே அவர் காட்டினார். பல கோடிக்கணக்கான தலைகளும் ஆயுதங்களும். இதுதான் கிருஷ்ணர். ந யஸ்ய கஷ்சித். இல்லையென்றால் கிருஷ்ணருக்கு எந்த எதிரியும் இல்லை. கிருஷ்ணருக்கு எந்த நண்பரும் இல்லை. அவர் பூரண சுதந்திரம் மாணவர். அவர் எந்த எதிரியையும் சார்ந்து இல்லை ஆனால் பெயரளவு நண்பன் மற்றும் பெயரளவு எதிரியின் நன்மைக்காகவே அவர் அவ்வாறு செயல்படுகிறார். அவர்தான் கிருஷ்ணர்.... அதுதான் கிருஷ்ணரின் பூரணமான இயற்கையாகும். ஒருவரிடம் கிருஷ்ணர் நண்பராகவோ அல்லது எதிராகவோ செயல்பட்டால், அதன் விளைவு ஒன்றுதான். என்வே தான் கிருஷ்ணர் பூரணமானவர்.

மிக்க நன்றி.

பக்தர்கள் : ஜெய பிரபுபாதா!