TA/Prabhupada 0942 - கிருஷ்ணரை மறப்பதன் மூலம் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கியுள்ளோம்: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0941 - Some of Our Students, They Think that 'Why should I work in this mission?'|0941|Prabhupada 0943 - Nothing Belongs to me. Isavasyam idam sarvam, Everything Belongs to Krsna|0943}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0941 - எங்கள் மாணவர்களில் சிலர், 'நான் ஏன் இந்த இயக்கத்தில் பணியாற்ற வேண்டும்|0941|TA/Prabhupada 0943 - எதுவும் எனக்கு சொந்தமானது அல்ல. ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம் , எல்லாம் கிருஷ்ணருக்கு சொந்தமு|0943}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:26, 16 August 2021



730427 - Lecture SB 01.08.35 - Los Angeles

அவித்யா-காம-கர்மபி:. காம. காம -ஆசை என்று பொருள். பல விஞ்ஞானிகளைப் போலவே அவர்கள் புதிய உணவுக்காக ஆராய்ச்சி செய்கிறார்கள், இன்று காலை நம் விஞ்ஞானி நண்பர் பேசியதைப் போல. புதிய உணவு என்றால் என்ன? கிருஷ்ணரால் நிர்ணயிக்கப்பட்ட உணவு ஏற்கனவே உள்ளது, "நீங்கள் இந்த விலங்கு, உங்கள் உணவு இதுதான். நீங்கள் இந்த விலங்கு, உங்கள் உணவு இதுதான்." எனவே, மனிதனைப் பொருத்தவரை, நீங்கள் பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களின் உணவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி (ப.கீ. 9.26). பிரசாதத்தை ஏற்றுக்கொள்வது மனிதனின் கடமையாகும். பிரசாதம் என்றால் முதலில் கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட உணவுப் பொருட்கள். இது நாகரிகம். "நான் ஏன் (உணவை) வழங்க வேண்டும்?" அது நாகரிகமற்றது. இது நன்றியுணர்வு. நீங்கள் கிருஷ்ணருக்கு வழங்கினால், நீங்கள் பக்தியுடன் இருக்கிறீர்கள் இந்த உணவுப்பொருட்கள், இந்த தானியங்கள், இந்த பழங்கள், இந்த பூக்கள், இந்த பால், இது கிருஷ்ணரால் வழங்கப்பட்டது. என்னால் அதை தயாரிக்க முடியாது. எனது தொழிற்சாலையில் இவற்றையெல்லாம் என்னால் தயாரிக்க முடியாது. ஒருவர் பயன்படுத்தும் எதையும், யாரும் தயாரிக்க முடியாது, அது கிருஷ்ணரால் வழங்கப்பட்டது. ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான். இந்த காமான். நாம் விரும்புகிறோம், கிருஷ்ணர் வழங்குகிறார். அவருடைய அளிப்பு இல்லாமல் நீங்கள் அதைப் பெற முடியாது. நமது இந்தியாவில் இருந்ததைப் போலவே, சுதந்திரத்திற்குப் பிறகு, தலைவர்கள் நினைத்தார்கள்: "இப்போது நமக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது, நாம் டிராக்டர்களை அதிகரிப்போம் மற்றும் பிற விவசாய கருவிகள் மற்றும் நமக்கு போதுமான உணவு கிடைக்கும்." தற்போதைய தருணத்தில், இரண்டு ஆண்டுகளாக, தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மழை இல்லை. எனவே இந்த டிராக்டர்கள் இப்போது அழுகின்றன. நீங்கள் பார்க்கிறீர்களா? இது பயனற்றது. டிராக்டர்கள், கருவிகள், என்று அழைக்கப்படுபவர்களால், கிருஷ்ணரின் அனுகூலம் இல்லாவிட்டால், நீங்கள் தயாரிக்க முடியாது. அவர் தண்ணீரை வழங்க வேண்டும், அது தேவை ... அண்மையில் செய்தி என்னவென்றால், மக்கள் மனவேதனையால் செயலாளரிடம் சென்று, அவர்கள் உணவைக் கோரினர், இதன் விளைவாக அவர்கள் சுடப்பட்டனர், சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆம், பலர் இறந்தனர். எனவே உண்மையில், இந்த ஏற்பாட்டை நாம் பெற்று இருந்தாலும் ஒருவர் வேலை செய்ய வேண்டும், ஆனால் அந்த வேலை எளிது. நீங்கள் கிருஷ்ண பக்தியுடன் இருந்தால்... எல்லாவற்றிற்கும் மேலாக, கிருஷ்ணர் உணவுப் பொருட்களை வழங்குகிறார். அது உண்மை. ஒவ்வொரு மதமும் அதை ஏற்றுக்கொள்கிறது. பைபிளில், "கடவுளே எங்களுடைய அன்றாட அப்பத்தை எங்களுக்குக் கொடுங்கள்" என்று கூறப்படுகிறது. அது உண்மை. கடவுள் கொடுக்கிறார். நீங்கள் தான் ... நீங்கள் ரொட்டி தயாரிக்க முடியாது. உங்களால் முடியும், நீங்கள் பேக்கரியில் ரொட்டி தயாரிக்கலாம், ஆனால் ... உங்களுக்கு கோதுமை யார் வழங்குவார்கள்? அது கிருஷ்ணரால் வழங்கப்படுகிறது. ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான்.

எனவே கிருஷ்ணரை மறப்பதன் மூலம் நாம் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கியுள்ளோம். இது பௌதிக இயல்பு. பவே 'ஸ்மின் க்லிஷ்யமானானாம். எனவே நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். க்லிஷ்யந்தி. பகவத்-கீதையில் மற்றொரு பதம் உள்ளது , மன:-ஷஷ்டானீ ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி. கர்ஷதி. நீங்கள் மிகவும் கடினமாக போராடுவீர்கள், ஆனால் இறுதியில் புலன் திருப்தியில். இறுதியில். இந்த பௌதிக உலகம் என்பது புலன் திருப்தி என்று பொருள், ஏனெனில் காம, காம என்றால் உணர்வு திருப்தி என்று பொருள். காம, அதற்கு நேர்மாறான சொல் காதல். காம மற்றும் ... காம என்றால் காமம், மற்றும் காதல் என்றால் கிருஷ்ணரை நேசிப்பது என்று பொருள். எனவே அது விரும்பப்படுகிறது. ஆனால் இங்கே இந்த பௌதிக உலகில் அவர்கள் மிகவும் கடின உழைப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பல தொழிற்சாலைகள், இரும்பு தொழிற்சாலைகள், இரும்பு உருகுதல், பெரிய இயந்திரங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர், அது உக்ர கர்மா, அசுர கர்மா என்று அழைக்கப்படுகிறது. எப்படியிருந்தாலும், நீங்கள் சிறிது ரொட்டி மற்றும் சில பழங்கள் அல்லது சில பூக்களை சாப்பிடுவீர்கள். இவ்வளவு பெரிய, பெரிய தொழிற்சாலைகளை ஏன் கண்டுபிடித்தீர்கள்? அது அவித்யா. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை இல்லை என்று வைத்துக்கொள்வோம். எனவே உலக மக்கள் அனைவரும் பட்டினி கிடந்தார்களா? யாரும் பட்டினியாக இருக்கவில்லை. நம் வேத இலக்கியங்களில், தொழிற்சாலை பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. இல்லை. எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் எவ்வளவு செழிப்பானவர்களாக இருந்தனர். வ்ரிந்தாவனத்தில் கூட. வ்ரிந்தாவனத்தில், கம்சன் நந்தா மஹாராஜாவை அழைத்தவுடன், உடனடியாக அவர்கள் விநியோகிக்க பாலை வண்டிகளில் எடுத்து சென்றனர். அவர்கள் அனைவரும் நன்றாக உடையணிந்து, நன்கு உணவுக்கு குறையின்றி இருந்ததை நீங்கள் இலக்கியத்தில் காண்பீர்கள். அவர்களுக்கு போதுமான உணவு, போதுமான பால், போதுமான பசுக்கள் இருந்தன. ஆனால் அவர்கள் கிராம ஆண்கள். வ்ரிந்தாவனம் ஒரு கிராமம். பற்றாக்குறை இல்லை. மோசமான தன்மை இல்லை, எப்போதும் வேடிக்கை, நடனம், கோஷமிடுதல் மற்றும் சாப்பிடுவது. எனவே இந்த சிக்கல்களை நாம் உருவாக்கியுள்ளோம். வெறுமனே நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். இப்போது, ​​நீங்கள் பல குதிரை இல்லாத வண்டிகளை உருவாக்கியுள்ளீர்கள், இப்போது, அதனால் பெட்ரோல் எங்கு கிடைக்கும் என்பதுதான் பிரச்சினை. உங்கள் நாட்டில் இது ஒரு பிரச்சினையாகிவிட்டது. ப்ரஹ்மானந்தா நேற்று என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். பல சிக்கல்கள் உள்ளன. வெறுமனே தேவையின்றி நாம் பல செயற்கை விருப்பங்களை உருவாக்கியுள்ளோம். காம-கர்மபி: இது காம என்று அழைக்கப்படுகிறது.