TA/Prabhupada 0995 - கிருஷ்ண உணர்வு இயக்கம் க்ஷத்ரியரின் அல்லது வைஷ்யரின் வேலை அல்ல

Revision as of 07:34, 16 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730407 - Lecture SB 01.14.43 - New York

பிரபுபாதா: நீங்கள் பாலை தங்கப் பானையில் குடித்தாலும் அல்லது இரும்புப் பானையில் குடித்தாலும், சுவை ஒன்றே. நீங்கள் பாலின் சுவை அல்லது எதையும் மாற்ற முடியாது, தங்கப் பானையை கொண்டு. ஆனால் இந்த முட்டாள்தனமான மனிதர்கள், "இரும்புப் பானைக்கு பதிலாக தங்கப் பானையில் போடும்போது எங்கள் இன்பம் இன்னும் சுவையாக இருக்கும்." என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மூடாஹ். அவர்கள் மூடாஹ் என்று அழைக்கப்படுகிறார்கள். (சிரிப்பு) இந்த பொருள் உடலில் இருந்து எப்படி வெளியேறுவது என்பது நமது தலையான குறிக்கோள் என்பது, அவர்களுக்குத் தெரியவில்லை. அதாவது, ஜன்ம-மிருத்யு-ஜாரா-வியாதி-துகா-தோசானுதர்ஷன் (ப கீ 13.9). இது உண்மையான அறிவு. ஒருவர் இந்த கொள்கையை தன் முன்னால் நிலைநிறுத்த வேண்டும், அதாவது, "ஜன்மா-மிருத்யு-ஜாரா-வியாதி இந்த நான்கு விஷயங்கள், பிறப்பு, இறப்பு, வயதாகி, நோய்வாய்ப்படுவது. இவை எனது முக்கிய பிரச்சினைகள் என்று." ஆனால் இது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இப்போது பெட்ரோலிய பிரச்சினையில் மும்முரமாக உள்ளனர். ஆம். இந்த பெட்ரோலியப் பிரச்சினையை, இந்த குதிரையற்ற தகர வண்டியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். (சிரிப்பு) ஆம். "குதிரையை விட சிறந்தது. இப்போது எனக்கு இந்த தகர வண்டி கிடைத்துவிட்டது" என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வயதானவுடன் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. நீங்கள் தெருவில் வீசுகிறீர்கள், குறிப்பாக உங்கள் நாட்டில். அதை யாரும் கவனிப்பதில்லை. ஆனால், ஒருவர் இந்த வண்டி வைத்திருக்க வேண்டும். அது பெட்ரோலில் இயங்க வேண்டும், உழைப்பை எடுக்க வேண்டும், மிகவும் கடின உழைப்பு, பாலைவனத்திற்குள் சென்று, அதைத் துளைத்து, பின்னர் எண்ணெயை வெளியே எடுத்து, பின்னர் தொட்டிகளில் கொண்டு வர வேண்டும். மேலும் இது உக்ர-கர்மா என்று அழைக்கப்படுகிறது. பகவத்-கீதாவில் இது கூறப்பட்டுள்ளது, இந்த அயோக்கியர்கள், அசுரர்கள், அவர்கள் மக்களுக்கு தொந்தரவு செய்வதற்காக. வெறுமனே உக்ர-கர்மாவை உருவாக்கியுள்ளனர். அவ்வளவுதான். க்ஷயாய ஜகதோ ஹிதாஹ், மேலும் இந்த போக்கு, அழிவை மிக அருகில், கொண்டு வருகிறது. இப்போது அவை நடந்து கொண்டிருக்கின்றன, பெரிய போர் நடக்கலாம், அதாவது அழிவு. ஒரு சிறிய சௌகரியத்தை உருவாக்க.... முற்காலத்திலும் போக்குவரத்து இருந்தது. ஆனால் அவர்கள் பழைய வழிகளில் ஈடுபடுவதை விரும்புவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு வேறு ஈடுபாடுகள் இல்லை. சிறந்த ஈடுபாடுகள், அவர்களுக்குத் தெரியாது. இங்கே சிறந்த ஈடுபாடு உள்ளது: ராதா-கிருஷ்ணா முன் வருவது, இறைவனை மகிமைப்படுத்தவும், நம் உறவைப் புரிந்து கொள்ளவும். இது நம்முடைய உண்மையான குறிக்கோள், ஆனால் உண்மையான குறிக்கோளில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் மிதமிஞ்சிய ஈடுபாடுகளில் ஆர்வமாக உள்ளனர்: அலுவலகத்தில் நாள் முழுவதும் வேலை செய்யவும், பின்னர் கிளப்புக்குச் செல்லவும், கால்பந்து கிளப், டென்னிஸ் கிளப் செல்லவும். இந்த வழியில் அவர்கள் இந்த மனித வடிவத்தின் மதிப்புமிக்க வாழ்க்கையை எவ்வாறு வீணாக்குவது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை நிறுத்துவதற்கு இந்த வாழ்க்கை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அவர்களுக்கு எந்த உணர்வும் இல்லை, அதாவது பிரதான பிரச்சனை, ஜன்ம-மிருத்யு-ஜரா. அவர்களுக்கு தெரியாது. எனவே, இந்த ஸ்ரீமத் பாகவதம் முழு உலகிற்கும் உண்மையான வாழ்க்கையை அளிக்கிறது, உண்மையானது, வாழ்க்கையின் பொருள் என்ன. எனவே இவை சமுதாய ஒழுங்குமுறை. குறிப்பாக, பிராமணர், வயதான ஆண்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் மாடுகளை கவனித்துக்கொள்வது. இது நாகரிகம். இந்த உயிர்வாழிகள் கவனித்துக் கொள்ள பட வேண்டும். இப்போது இந்த அயோக்கியர்கள் அவர்கள் மாடுகளை கொன்று பெண்களை விபச்சாரிகளாக்குகின்றனர், மேலும் குழந்தைகளை கருப்பையில் கூட கொல்கின்றனர். மேலும் பிராமண மரியாதை குறித்து எந்த கேள்வியும் இல்லை, பிராமண கலாச்சாரமும் இல்லை. நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஹஹ்? சமூகத்தில் பிராமண கலாச்சாரம் இல்லை என்றால், அந்த சமூகம் விலங்கு சமுதாயத்தை விட தாழ்ந்தது. ஆகையால், நாங்கள் எங்கள் பிரார்த்தனைகளை வழங்குகிறோம், நமோ பிரம்மண்ய-தேவயா கோ-பிரஹ்மனா-ஹிதாய சா ஜகத்-திதாய-கிருஷ்ணாய கோவிந்தாய நமோ நமஹ. முதல் மரியாதை வழங்கப்படுகிறது, கோ-பிராமண-ஹிதாய சா, ஜகத்-திதாய. முழு உலக நலனுக்காக நீங்கள் உண்மையில் சில நலன்புரி நடவடிக்கைகளை செய்ய விரும்பினால், இந்த இரண்டு விஷயங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும், கோ-பிராமண-ஹிதாய சா, மாடுகள் மற்றும் பிராமணர்கள். அவர்களுக்கு முதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பின்னர் ஜகத்-திதாய, பின்னர் முழு உலகத்தின் உண்மையான நலன் கிடைக்கும். அவர்களுக்கு தெரியாது. க்ருஷி-கோ-ரக்ஷ்ய-வாணிஜ்யம், கோ-ரக்ஷ்ய, வாணிஜ்யம், வைஷ்ய-கர்ம ஸ்வபாவ-ஜம். இது வணிக வர்க்கத்தினரின் கடமையாகும்: விவசாயத்தை மேம்படுத்துதல், பசுக்களுக்கு பாதுகாப்பு அளித்தல், கிருஷி-கோ-ரக்ஷ்ய வாணிஜ்யம். இதுதான் தொழில். உங்களுக்கு அதிகப்படியான உணவு கிடைத்திருந்தால், நீங்கள் வர்த்தகம் செய்யலாம், வாணிஜ்யம். மூளை சார்ந்த வேலையைச் செய்வதற்காகவே, ப்ராஹ்மணர் என்பது பொருள். அவர் ஆலோசனை வழங்குவார். நம்மைப் போலவே, கிருஷ்ண பக்தி இயக்கம், நாம் ... நாம், க்ஷத்ரியரின் தர்மத்திற்கோ அல்லது வைஷ்யரின் தர்மத்திற்க்கோ பொறுப்பு அல்ல, பக்தர்கள், ஆனால் தேவைப்பட்டால் அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் உண்மையான பொறுப்பு, பிராமணரின் பொறுப்பு என்னவென்றால், வேதங்கள், பிரம்மம், உச்ச பிரம்மம், முழுமையான சத்தியத்தை அறிந்து கொள்வதே பிராமணனின் தர்மம். அவர் அறிந்திருக்க வேண்டும், அவர் அறிவை விநியோகிக்க வேண்டும். இது ப்ராஹ்மண. கீர்த்தயந்தோ. சததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தஸ் சா துருத-வ்ரதாஹ். இது பிராமணனின் தொழில்.

எனவே, கடவுள் இருக்கிறார் என்று பிரசங்கிக்கும் இந்த தொழிலை நாம் எடுத்துள்ளோம். கடவுளுடன் நமக்கு நெருக்கமான உறவு கிடைத்துள்ளது. எனவே நீங்கள் அதற்கேற்ப செயல்பட்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இது தான் நமது கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த அயோக்கியர்கள் மறந்துவிட்டார்கள், அல்லது அவர்களுக்கு கடவுளை தெரிந்து கொள்வதில் அக்கறை இல்லை, அதுவே அவர்களின் துன்பங்களுக்கு காரணம். நேற்று அந்த பத்திரிகை நிருபர் கேட்டார் ... என்ன கேள்வி?

பக்தர்: "இது எண்ணெய் நெருக்கடியை தீர்க்க உதவுமா?"

பிரபுபாதா: ஆம். அதற்கு நான் என்ன பதிலளித்தேன்?

பக்தர்: "ஆம். ஏன் இல்லை?"

பிரபுபாதா: ஹஹ்?

பக்தர்: "ஏன் இல்லை?"

பிரபுபாதா: உங்களுக்கு ஞாபகம் இல்லையா?

பக்தர்: ஆம். கிருஷ்ண உணர்வு ஏற்கனவே உள்ளது என்று சொன்னீர்கள்.

பிரபுபாதா: ஆம். உண்மையில், அதுதான் உண்மை! ஆனால் அவர்கள் அதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்போது, ​​என்ன பிரச்சினை? இது ஒன்றும் கடினம் அல்ல. பெட்ரோல் உள்ளது, அது பயன்படுத்தப்படுகிறது, இது நம் பயன்பாட்டிற்கானது, ஆனால் சிரமம் என்னவென்றால், அரேபியர்கள், அது தங்களுடையது என்று அவர்கள் நினைக்கிறார்கள் ...