TA/Prabhupada 0994 - கடவுளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன



730407 - Lecture SB 01.14.43 - New York

எனவே நாங்கள் கம்யூனிச நாடு, மாஸ்கோவுக்குச் சென்றபோது, ​​உணவு தேவை இருப்பதை நான் நினைத்தேன். அவர்களால் தங்கள் விருப்பப்படி உணவுப்பொருட்களைக் கூட பெற முடியவில்லை. அரசாங்க விதிகள் எதுவாக இருந்தாலும், குப்பையாக இருந்தாலும், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் எங்களுக்கு நல்ல உணவுப் பொருட்கள் எதுவும் இல்லை. நாங்கள் அந்த தேசிய ஹோட்டலில் தங்கியிருந்தோம், ஷியாமசுந்தரா பொருட்களைப் பெறுவதற்கு குறைந்தது இரண்டு மணிநேரம் செலவிட வேண்டியிருந்தது. அதுவும், மிக நல்லவையாக அல்ல. அரிசி பெற முடியவில்லை. ஒரு மெட்ராசி பெரிய மனிதர், அவர் எங்களுக்கு கொஞ்சம் அரிசி, நல்ல கோதுமை மாவு வழங்கினார்; இல்லையெனில் பால் மற்றும் வெண்ணெய் மட்டுமே கிடைக்கும், மற்றும் இறைச்சி, அவ்வளவுதான். பழம் இல்லை, காய்கறிகள் இல்லை, நல்ல அரிசி இல்லை, இவை எதுவும் கிடைக்கவில்லை. இது கலி-யுகம். விஷயங்கள் இருக்கும், ஆனால் கிடைக்காது, குறைக்கப்படும். உண்மையில் உணவு தானியம் கிருஷ்ணரால் வழங்கப்படுகிறது.

நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம்
ஏகோ ​யோ பஹுனாம் விததாதி காமான்.

கடவுளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். நாமும் நபர், கடவுள் ஒரு நபர். நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம். அவரும் வாழும் உயிரினம், நாமும் வாழும் உயிரினம். கடவுளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அந்த ஏகா என்பது ஒரு உயிருள்ள நபர், நித்யா, ஒற்றை எண். எனவே, பஹுனாம் விததாதி காமான். இந்த பன்மை எண்ணான பஹூனாம் அனைத்திற்கும் அவர் வாழ்க்கையின் தேவைகளை வழங்குகிறார். நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் . சமஸ்கிருதத்தை அறிந்தவர்கள், இந்த நித்யஹ் என்றால் ஒற்றை நபர் என்றும், நித்யானாம், அதாவது பன்மை நபர்கள் என்றும் பொருள். அவர்கள் இருவரும் நபர்கள், அவர்கள் இருவரும் வாழும் உயிரினங்கள், ஆனால் அந்த ஒற்றை எண் ஏன் உச்சமாக கருதப்படுகிறது? ஏனென்றால் அவர் எல்லா பன்மைக்கும் உணவுப்பொருட்களை வழங்குகிறார். எனவே உண்மையில் கிருஷ்ணர் அனைத்து உயிரினங்களுக்கும் வழங்குவதற்கு எல்லாம் தயாராக வைத்து இருக்கிறார். யாரும் பட்டினி கிடப்பதற்காக அல்ல. இல்லை. சிறைச்சாலையைப் போலவே, அவர்கள் கண்டனம் செய்யப்பட்ட கைதிகள் என்றாலும், அவர்கள் பட்டினி கிடப்பது கிடையாது, மேலும், அவர்கள் மருத்துவ வசதிகளையும் அரசாங்கம் கவனித்துக்கொள்கிறது. அவர்களை பட்டினி கிடக்க விடுவதில்லை -இல்லை. இதேபோல், இந்த பொருள் உலகில் நாம் அனைவரும் கண்டனம் செய்யப்பட்டாலும், நாம் கைதிகள், கைதிகள். நாம் நகர முடியாது, ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்கு செல்ல முடியாது. அவர்கள் மிகவும் முயற்சி செய்கிறார்கள். இப்போது அவை தோல்வியடைந்துள்ளன. அவர்கள் இப்போது பேசுவதில்லை. (சிரிப்பு). அது சாத்தியமில்லை, ஏனென்றால் நாம் கைதிகள். நிபந்தனைக்கு உட்பட்டவர்கள். நீங்கள் இந்த கிரகத்தில் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கிரகத்தில் தான் இருக்க வேண்டும். உங்களுக்கு சுதந்திரம் இல்லாததால், உங்கள் சொந்த விருப்பத்திற்கும் சுதந்திரத்திற்கும் எந்த சுதந்திரமும் இல்லை. ஆனால் நாரத முனிக்கு சுதந்திரம் உண்டு. நாரத முனி ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்கு செல்கிறார். அவர் ஆன்மீக வானத்திலிருந்து பொருள் வானம் வழியாக வருகிறார், ஏனென்றால் அவர் ஒரு சரியான பக்தர். எனவே, அவரே சிறந்த வாழும் உயிரினம். கிருஷ்ணருக்கு முழு சுதந்திரம் கிடைத்திருப்பதால், அதேபோல் நாம் பரிபூரணராகவும், கிருஷ்ண உணர்வுடனும் இருக்கும்போது, ​​நாமும் சுதந்திரமாகி விடுகிறோம். இது நம் நிலைப்பாடு. ஆனால் நிபந்தனைக்குட்பட்ட நிலையில் சுதந்திரம் இல்லை. முடியாது. பத்தா. ப்ரஹ்மாண்ட பிரமித்தே கோண பாக்கியவான், நாம் நிபந்தனைக்கு உட்பட்டவர்கள். ஆனால், நிபந்தனைக்கு உட்பட்ட நிலையில் கூட, வேதக் கொள்கைகளைப் பின்பற்றினால் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். மகிழ்ச்சியான, மற்றும் இந்த மனித வாழ்க்கை வடிவம் குறிப்பாக, அந்த நோக்கத்திற்காக உள்ளது, நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும், கிருஷ்ணா பக்தியை வளர்ப்பதற்காக நேரத்தை மிச்சப்படுத்துங்கள், இதனால் அடுத்த வாழ்க்கையில் நீங்கள் இந்த பொருள் உலகில் இல்லை. நீங்கள் ஆன்மீக உலகிற்கு மாற்றப்படுகிறீர்கள். இதுதான் மனித வாழ்க்கையின் நோக்கம். ஆனால் இந்த அயோக்கியர்களுக்குத் தெரியாது. நாகரிகத்தை முன்னேற்றுவதாக அவர்கள் நினைக்கிறார்கள், ஏனென்றால் பூனைகள் மற்றும் நாய்கள், தரையில் தூக்கத்தில் படுத்திருக்கும, நமக்கு 104- மாடி கட்டிடம் கிடைத்துள்ளது, நாம் அங்கே படுத்துக் கொள்கிறோம். இது அவர்களின் முன்னேற்றம். ஆனால் தூங்குவதும், தூங்குவதன் மூலம் அனுபவிப்பதும் நாய்க்கும், 104 வது மாடியில் படுத்திருக்கும் மனிதனுக்கும் ஒரே மாதிரியானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. (சிரிப்பு) இதேபோல், நாய்க்கும் மனிதனுக்கும் அல்லது உபதெய்வங்களுக்கும் பாலியல் வாழ்க்கை, இன்பம் ஒன்றே. எந்த வித்தியாசமும் இல்லை.