TA/Prabhupada 1022 - முதல் விஷயம் என்னவென்றால், எப்படி நேசிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

Revision as of 08:29, 19 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730408 - Lecture SB 01.14.44 - New York

எனவே முதல் விஷயம் என்னவென்றால், எப்படி நேசிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ (ஸ்ரீ.பா. 1.2.6). அது முதல் தர மதம். நீங்கள் பின்பற்றும் மத அமைப்பு. யதோ பக்திர் அதோக்ஷஜே. எப்படி நேசிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்தால் அதோக்ஷஜா... அன்பு பற்றி கேள்வி இருக்கும்போது, ​​அடுத்த கேள்வி, "நான் யாரை நேசிப்பேன்?" என்பதாகும். எனவே, கிருஷ்ணரின் மற்றொரு பெயர் அதோக்ஷஜா. அதோக்ஷஜா என்றால் "உங்கள் உணர்வுக்கு அப்பாற்பட்டது" என்று பொருள். உணர்வின் வகைக்குள் அல்லது எல்லைக்குள் உள்ள ஒன்றை இங்கே நாம் விரும்புகிறோம். நான் ஒரு பெண் அல்லது ஒரு ஆண் அல்லது யாரோ, என் நாடு, என் சமூகம், என் நாய், எல்லாவற்றையும் நேசிக்கிறேன். ஆனால் அது உங்கள் உணர்வின் எல்லைக்குள் உள்ளது. ஆனால் கடவுள் உங்கள் உணர்வுக்கு அப்பாற்பட்டவர். இருந்தாலும் நீங்கள் நேசிக்க வேண்டும், அதுதான் மதம். கடவுள் உணர்வுக்கு அப்பாற்பட்டவர், ஆனால் நீங்கள் நேசித்தால், அவர் உங்கள் உணர்வுக்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும், நீங்கள் கடவுளை உணர்வீர்கள். ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரத் அத: (பி.ச. 1.2.234). நாம் இங்கே ராதா கிருஷ்ணரை வணங்குவது போல. கிருஷ்ணர் மீது அன்பு இல்லாதவர்கள், "இந்த முட்டாள்கள், பளிங்கினால் செய்யப்பட்ட ஒரு பொம்மையை கொண்டு வந்துள்ளனர், என்று நினைப்பார்கள்", "அவர்கள் வெறுமனே தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள்." பார்க்கிறீர்களா? ஏனென்றால் அவருக்கு அன்பு இல்லை. அவருக்கு அன்பு இல்லை; ஆகவே, கிருஷ்ணரின் இந்த வழிபாட்டை அவர் பாராட்ட முடியாது, அன்பின் காரணமாக. சைதன்யா மஹாபிரபுவைப் போலவே கிருஷ்ணர் மீது அன்பு கொண்ட ஒருவர், அவர் ஜெகந்நாதர் கோவிலுக்குள் நுழைந்தவுடன்: "இதோ என் இறைவன்" என்று அவர் உடனடியாக மயக்கம் அடைந்தார். எனவே வித்தியாசம் என்ன… அதுதான் வித்தியாசம்: கடவுளை நேசிப்பவர், எல்லா இடங்களிலும் கடவுள் இருப்பதை அவர் பார்க்க முடியும்.

ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன
ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி
(பி.ச. 5.38).

நீங்கள் உண்மையில் .... நீங்கள் உண்மையில் கடவுளை நேசிப்பவராக இருந்தால், நீங்கள் ஒவ்வொரு அடியிலும் கடவுளைக் காண்பீர்கள். ஒவ்வொரு அடியிலும். பிரஹ்லத மஹாராஜாவைப் போல. ப்ரஹ்லாத மஹாராஜா, தனது தந்தையால் தாக்கப்பட்டபோது, அவர் தூணை பார்த்தார், தந்தை அவருடைய கடவுள் தூணில் இருக்கக்கூடும் என்று நினைத்தார், எனவே அவர் உடனடியாக, "இந்த தூணிலா உன் கடவுள்?" "ஆம், என் தந்தையே." "ஓ." உடனே உடைத்தார். தம் பக்தரின் வார்த்தைகளைக் காக்க, கடவுள் வெளியே வந்தார்.

எனவே கடவுளின் தோற்றமும் மறைவும் பக்தனுக்காக.

பரித்ராணாய ஸாதூனாம்
வினாஷாய ச துஷ்க்ருதாம்
(ப.கீ. 4.8).