TA/Prabhupada 1023 - கடவுள் எல்லாம் வல்லவர் என்றால், அவர் வரமுடியாது என்று, ஏன் அவருடைய சக்தியைக் குறைக்கிற



730408 - Lecture SB 01.14.44 - New York

கடவுள் இரண்டு வேலைகளுக்காக வருகிறார்: பக்தருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அரக்கர்களைக் கொல்லவும். எனவே அரக்கர்களைக் கொல்வதற்காக, அவர் வரத் தேவையில்லை. அவருக்கு அபரிமிதமான சக்தி உள்ளது. வெறுமனே அவரது குறிப்பால், எந்தவொரு நபரும் கொல்லப்படலாம். போதுமான சக்தி உள்ளது, துர்காதேவி. ஆனால் அவர் தனது பக்தருக்காக வருகிறார், ஏனென்றால் அவருடைய பக்தர், அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார். அவர் எப்போதும் முழுமுதற்கடவுளின் பாதுகாப்பை நாடுகிறார். ஆகவே, பக்தர் அவரைக் கண்டு திருப்தி அடைவார், என்பதற்காக அவர் வருகிறார். அதுதான் (தெளிவற்றது). பக்தர்கள் எப்போதுமே பிரிவை உணர்கிறார்கள், அவர்களுக்கு நிவாரணம் அளிக்க, கடவுளின் அவதாரம் வருகிறது. ப்ரலய-பயோதி ஜலே த்ருதவான் அஸி வேதம் (ஸ்ரீ தஷாவதார ஸ்தோத்ர 1). பக்தர்களுக்கு நிவாரணம் அளிக்க வெவ்வேறு அவதாரங்கள் வருகின்றன. இல்லையெனில் அவருக்கு எந்த வேலையும் இல்லை. இந்தியாவில், இந்துக்களின் ஒரு பிரிவினர் உள்ளனர், அவர்கள் அவ்வாறு அழைக்கப்படுகின்றனர், ஆனால் உண்மையில் அவர்கள் ஆர்ய-சமாஜ் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆர்ய-சமாஜ். ஆர்ய-சமாஜின் கருத்து, "கடவுள் ஏன் வர வேண்டும்? அவர் மிகவும் பெரியவர்; அவர் ஏன் இங்கு வர வேண்டும்? "அவதாரம், அவர்கள் நம்பவில்லை. முஸ்லிம்களும் அவதாரங்களை நம்புவதில்லை. அதே கேள்வியை அவர்களும் வலியுறுத்துகிறார்கள், "கடவுள் ஏன் வர வேண்டும்? அவர் ஏன் மனிதர்களைப் போல் தோன்ற வேண்டும்?" ஆனால், "கடவுள் ஏன் வரமாட்டார்?" என்ற இந்த கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க முடியாது. கடவுள் வர முடியாது என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் "கடவுள் ஏன் வர முடியாது?" என்று கேள்வி எழுப்பினால், பதில் என்ன? கடவுள் எல்லாம் வல்லவர் என்றால், அவர் வர முடியாது என்று ஏன் அவருடைய சக்தியைக் குறைக்கிறீர்கள்? அவர் எந்த வகையான கடவுள்? கடவுள் உங்கள் சட்டத்தின் கீழ் இருக்கிறாரா, அல்லது நீங்கள் கடவுளின் சட்டத்தின் கீழ் இருக்கிறீர்களா?

எனவே, இது கடவுள் மீது பக்தி கொண்டவர்களுக்கும் அரக்கர்களுக்கும் உள்ள வித்தியாசம். அரக்கர்களால் சிந்திக்க முடியாது. "ஒரு வேளை கடவுள் இருக்கலாம், அவர் ஒதுங்கியிருக்க வேண்டும், உருவமற்றவராக இருக்க வேண்டும்" என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஏனெனில் 'அளவு' கொண்ட இந்த வடிவத்தின் அனுபவம் அவருக்கு உள்ளது. ஆகவே, கடவுள் வரும்போது, ​அவர் மாயையின் வடிவத்தை எடுத்துக்கொள்கிறார் என்று மாயாவாத தத்துவவாதி கூறுகிறார். அது மாயாவதி என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் உண்மையில் கடவுளை நம்பவில்லை. மாயாவாதம், அத்வைதம் - ஷூன்யவாத. நிர்விஷேஷ-ஷூன்யவாதி. அவர்களில் சிலர் நிர்விஷேஷ: "ஆம், கடவுள் இருக்கலாம், ஆனால் அவருக்கு எந்த வடிவமும் இல்லை." மற்றும். மாயாவதி.....இருவரும் மாயாவதி, ஷூன்யவாதி. பௌத்தர்களும், சைவர்களும், எனவே அவர்கள் நம்பவில்லை. ஆனால், நாத்திகர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பது வைஷ்ணவர்களாகிய நமக்குத் தெரியும். ஸம்மோஹாய ஸுர-த்விஷாம் (ஸ்ரீ.பா. 1.3.24) புத்தர் நாத்திகரை ஏமாற்ற வந்தார். நாத்திகர்கள் கடவுளை நம்பவில்லை, எனவே புத்தர் சொன்னார், "ஆம், நீங்கள் சொல்வது சரிதான். கடவுள் இல்லை. ஆனால் நீங்கள் நான் சொல்வதை கேட்க முயற்சி செய்யுங்கள்." ஆனால் அவர் கடவுள். எனவே இது மோசடி. "நீங்கள் கடவுளை நம்ப வேண்டாம், ஆனால் என்னை நம்புங்கள்." "ஆம், ஐயா, நான் நம்புகிறேன்." அவர் கடவுள் என்பதை நாம் அறிவோம். (சிரிப்பு) கேஷவ த்ருத-புத்த-ஷரீர ஜய ஜகதீஷ ஹரே (கீதா கோவிந்த, ஸ்ரீ தஷாவதார ஸ்தோத்ர 9). பாருங்கள் (தெளிவற்றது).