TA/Prabhupada 1028 - இந்த அரசியல்வாதிகள், அவர்கள் சூழ்நிலையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 1027 - My Wife, Children & Society are My soldiers. If I am in Danger, They Will Help Me|1027|Prabhupada 1029 - Our Religion Does Not Say Asceticism. Our Religion Teaches to Love God|1029}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1027 - என் மனைவி, குழந்தைகள் மற்றும் சமூகம், என்னுடைய போர் வீரர்கள். நான் ஆபத்தில் இருந்தால், |1027|TA/Prabhupada 1029 - எங்கள் மதத்தின் நோக்கம் கடுந்தவம் அல்ல. எங்கள் மதம் கடவுளை நேசிப்பதை கற்ப்பிக்கிறது|1029}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:37, 16 August 2021



731129 - Lecture SB 01.15.01 - New York

பிரபுபாதா : அனைவரும் சுதந்திரமாக இருப்பதாக தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவன் சார்ந்துதான் உள்ளான். ஆனால் பொய்யான தளத்தை சார்ந்து உள்ளான். இதுதான் பௌதிக நாகரீகத்தின் தவறு. கவிழ்ந்துவிடும் தளமான, பௌதீக உலகத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாம் கிருஷ்ணருடைய அடைக்கலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் கிருஷ்ணர் நம் அனைவரிடமும் மிகுந்த நட்புணர்வுடன் இருக்கிறார். எனவேதான், இதைக் கூறுவதற்காக அவர் வைகுண்டத்தில் இருந்து கீழ் இறங்கி வருகிறார், அதுதான் பகவத் கீதை. மேலும் இது ஸ்ரீமத் பாகவதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது மட்டும் தான் ஒரே விஷயம். எனவே பிரச்சனைகள், மக்கள் இப்போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதை நான் விமான நிலையத்தில் கூறினேன். பத்திரிக்கையாளர் என்னிடம் கேட்டார், "இந்த பிரச்சனைகள் வருவதற்கு என்ன தான் தீர்வு?" தீர்வு கிருஷ்ண உணர்வு தான், இது ஏற்கனவே இருக்கிறது. ஆனால் அயோக்கியனே நீ இதை எடுத்துக் கொள்ள மாட்டாய். தீர்வு ஏற்கனவே இருக்கிறது. அரேபியர்கள் எண்ணையை கிருஷ்ணரின் சொத்து என்று நினைத்தால் மேலும் மற்றவர்கள், வாங்குபவர்களும், இது கிருஷ்ணருடைய சொத்து என்று நினைத்தால், பிறகு அவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும். அமெரிக்காவும் இந்த அமெரிக்க நிலமானது கூட, கிருஷ்ணருடைய சொத்து என்று ஒப்புக்கொள்ள வேண்டும். அரேபிய எண்ணெய் கிருஷ்ணருடைய சொத்து, கடவுளுடைய சொத்து, நாம் அதை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்வோம் என்று நீங்கள் நினைத்தால், பிறகு ஏன் அரேபியர்களைத் தங்கள் பாலைவனத்திலிருந்து வந்து, அமெரிக்காவில் வசிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது? ஆனால் அவர்கள் முட்டாள்கள், அவர்கள் வரமாட்டார்கள், அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் உள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் என்றால் வெறுமனே தவறு செய்வது, தவறு, தவறு, தவறு, தவறு. அவ்வளவுதான். அதுதான் அவர்களுடைய வேலை. நீங்கள் ஏன் இணைவதில்லை? ஆம், இந்த அரேபியன் எண்ணை, கிருஷ்ணருடைய சொத்து. அதைப்போலவே, ஆஸ்திரேலிய நிலம் அல்லது ஆப்பிரிக்க நிலம் அல்லது இந்த அமெரிக்க நிலம், பெரும் பரப்பில் அமைந்துள்ள மாநிலம், ஆனால் "நீங்கள் இங்கே வரமுடியாது. யொவ் யொவ்" என்று குடியேற்றத் துறை யினர் கூறுகின்றனர். பார்த்தீர்களா. யொவ் யொவ் துறையினர். எனவே இந்த முட்டாள்களும், அயோக்கியர்களும், எல்லா அரசியல்வாதிகளும், சூழ்நிலையை மோசமாக்குகின்றனர், ஆனால் அவர்கள் பெரும் அயோக்கியர்களாக இருப்பதினால், அவர்கள் தீர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கிருஷ்ண உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும். அதுதான் உண்மை. மூடா4.ஆனால் அவர்கள் மிகுந்த அயோக்கியர்கள், துஷ்க்ருதின- பாவச் செயல்கள் நிரம்பியவர்கள். ந மாம்' து3ஷ்க்ரு'தின மூடா:4 ப்ரபத்3யந்தே நராத4மா:, மனிதரில் கீழானவர்கள். எனவே, பிரச்சார செயல்கள் இந்த வகையான மனிதர்களுடன் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். துஷ்க்ருதின என்றால் பாவச் செயல்களால் நிரம்பியவர்கள். மூடா4, அயோக்கியர்கள், நராதமா:, மனிதர்களில் கீழானவர்கள் மேலும், மாயயாபஹ்ரு'த-ஜ்ஞானா, அவர்கள் கல்வியில் மிக முன்னேறிய வர்களாக நினைத்துக் கொள்கிறார்கள் ஆனால் முதல் தர முட்டாள்: மாயை அவர்களுடைய உண்மையான அறிவை எடுத்துவிட்டது, மாயயாபஹ்ரு'த-ஜ்ஞானா, ஆஸுரி பா4வம் ஆஷ்2ரிதா:. ஏன் இவை எல்லாம்? ஏனெனில், அவர்கள் கடவுள் அற்றவர்கள் . கடவுளற்ற தன்மை தான் ஒரே குற்றம். ஆஸுரி பா4வம் ஆஷ்2ரிதா:. காரணம், கடவுள் இல்லை என்னும் நிலையை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். " கடவுளே இல்லை" இந்தப் பெரிய பெரிய விஞ்ஞானிகள், கடவுள் இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். "இந்த படைப்பிற்கு காரணம், பௌதிகம் வேதியல் பொருட்கள், தண்ணீர், வேதியல் பொருட்களான ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் சேர்க்கையால் வந்திருக்கிறது. இவையெல்லாம்..." இந்த முட்டாள்தனமான கோட்பாடுகள் நோபல் பரிசுகளை பெறுகின்றன. அவர்கள் நோபல் பரிசை பெறுகிறார்கள். இதுதான் நிலை. எனவே, இந்த ஸ்லோகத்திலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்.... ஏவம்' க்ரு'ஷ்ண-ஸக:2 க்ரு'ஷ்ணோ ப்4ராத்ரா ராஜ்ஞா விகல்பித:, நானா-ஷ2ங்கா... இந்த அயோக்கியர்கள்... நம்முடைய அதாவது மூத்த சகோதரன் முன்கூட்டியே தன் கருத்தை தெரிவிக்கிறார் "இதுதான் காரணம்," "இதுதான் காரணம்," "இதுதான் காரணம்," "இதுதான் காரணம்." ஆனால் ஒரே காரணம் கிருஷ்ணர் தான், கிருஷ்ணரை மறந்து இருப்பதுதான், அதை அவர்கள் அறிய மாட்டார்கள். இதுவே ஒரே காரணம்.

க்ரு'ஷ்ண பு4லிய ஜீவ போ4க3 வாஞ்சா2 கரே,
பாஷ2தே மாயா தாரே ஜாபடியா...

இதுதான் காரணம். எனவே இதனை பிரச்சாரம் செய்ய முயற்சி செய்யுங்கள். ஆனால் எல்லோரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், ஆனாலும் ஒரு சிறு சதவீதத்தினர் கூட, மொத்த ஜனத்தொகையில் ஒரு சதவீதத்தினர் ஒப்புக்கொள்ளலாம். அதாவது வானத்தில், ஒரே ஒரு சந்திரன் தான், ஆனால் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பதைப் போல. அவை பயனற்றது. கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் மதிப்பு என்ன? ஆனால் ஒரு சந்திரன், ஓ, இரவின் முழு இருளையும் அகற்றி விடும். அதைப்போலவே கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொண்டுள்ளவர்களாவது, நீங்கள் அனைவரும், ஒவ்வொருவரும் சந்திரன் ஆகி உலகிற்கு ஒளியூட்டுங்கள். இந்தப் பெயரளவு மின்மினிப்பூச்சிகள், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. இது தான் உண்மை. மின்மினிப்பூச்சியாக இருக்காதீர்கள். சூரியனாகவும் சந்திரனாகவும் ஆகுங்கள். அதன்பிறகு நீங்கள்... மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிக்க நன்றி.

பக்தர்கள் : ஜெய பிரபுபாதா!