TA/Prabhupada 1042 - உங்கள் மொரிஷியஸ் நாட்டில் தானியங்கள் விளைக்க நிறைய நிலம் இருக்கிறது இந்த

Revision as of 06:35, 6 July 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 1042 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


751002 - Lecture SB 07.05.30 - Mauritius

உங்கள் மொரிஷியஸ் நாட்டில் தானியங்கள் விளைக்க நிறைய நிலம் இருக்கிறது இந்த விஷயங்களை குறித்துக் கொள்ளவேண்டும், எவ்வாறு அவர்கள் பாவம் நிறைந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என. அதன் தீர்வு பகவத்-கீதையில் வழங்கப்பட்டிருக்கிறது, அதாவது "உணவு தானியங்களை விளையுங்கள்." அன்னாத் பவந்தி பூதானி (பகவத்-கீதை 3.14). நான் உங்கள் மொரிஷியஸ் நாட்டில் பார்த்திருக்கிறேன், உங்களிடம் உணவு தானியங்களை விளைக்க நிறைய நிலம் இருக்கிறது. ஆக நீங்கள் உணவு தானியங்களை விளைக்க வேண்டும். உணவு தானியங்களை விளைப்பதற்கு மாற்றாக ஏற்றுமதி செய்வதற்காக நீங்கள் கரும்பை விளைக்கிறீர்கள் என்று நான் அறிந்தேன். ஏன் அப்படி? மேலும் நீங்கள் அரிசி, கோதுமை, பருப்பைப் போன்ற உணவு தானியங்களுக்காக மற்றவர் ஆதரவில் வாழ்கிறீர்கள். ஏன்? ஏன் இந்த முயற்சி? முதலில் நீங்கள் உங்களுக்கு தேவையான உணவு பொருட்களை விளையுங்கள். பிறகு உங்களிடம் சமயம் இருந்து, மக்களிடம் போதுமான அளவில் உணவு தானியங்கள் இருந்தால், நீங்கள் மற்ற பழங்களை , காய்களை ஏற்றுமதி செய்வதற்காக விளைக்கலாம். தன்னிறைவு அடைவது உங்கள் பிரதான தேவை. அது தான் கடவுளின் ஏற்பாடு. எவ்விடமும் உணவு தானியங்களை விளைக்க நிறைய நிலம் இருக்கிறது. உங்கள் நாட்டில் மட்டும் அல்ல; நான் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறேன் - ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பலர், அமெரிக்கா உட்பட. நிறைய விளைநிலம் காலியாக இருக்கிறது. அதில் உணவு தானியங்களை விளைத்தால், தற்போதைய மக்கள்தொகையைப் போல் பத்து மடங்கு அதிகமாக மக்களுக்கு உணவூட்டலாம். பற்றாக்குறைக்கு இடமே இல்லை. முழு சிருஷ்டியும் கிருஷ்ணரால் இவ்வாறு செய்யப்பட்டு இருக்கிறது அதில் எல்லாம் 'பூர்ணம்', முழுமையானது. பூர்ணம் இதம் பூர்ணம் அத: பூர்ணாத் பூர்ணம் உதச்யதே, பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவாவஷிஷ்யதே (ஈசோபநிஷத் தொடக்க வழிபாடு). நாம் உணவு தானியங்கள் விளைக்காமல் - அது உங்களுக்கு தேவையான பொருள் - மக்களை தேவையில்லாமல் பஞ்சத்தில் வைத்திருந்தால் அது பாவம். அது பாவம்.