TA/Prabhupada 1047 - அவன் ஒரு தவறான கடமையை எடுத்துக்கொண்டு, அதற்காக மிகவும் கடினமாக உழைக்கிறான். எனவே அவன்: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 1046 - Decide whether to Get a Body which will be Able to Dance, Talk & Play with Krsna|1046|Prabhupada 1048 - You Shall Never be Happy - PERFECT INSTRUCTION - Unless You Go Back to Godhead|1048}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 1046 - கிருஷ்ணருடன் பேசி, விளையாடி, ஆடக்கூடிய ஒரு உடலைப் பெறுவதா என்று முடிவு செய்யுங்கள்|1046|TA/Prabhupada 1048 - இறைவனின் திரு நாட்டிற்குத் திரும்பும் வரை, நீ என்றுமே மகிழ்ச்சியாக இருக்க மாட்டாய் - |1048}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 08:32, 19 August 2021



750712 - Lecture SB 06.01.26-27 - Philadelphia

எனவே இந்த மனிதப் பிறவி வேண்டுமா என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் உங்களுக்கு அடுத்த பிறவியில் "நான் என்ன வகையான உடலை பெறப் போகிறேன் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை" என்றால், இதை நீங்கள் நம்பவில்லை என்றால்........ நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், அது பொருட்டல்ல; இயற்கையின் சட்டங்கள் கட்டாயமாக செயல்படும். நீங்கள் கூறலாம், "அடுத்த பிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்றுக் கூறினாலும் இயற்கையின் சட்டம் செயல்படும். கர்மணா தை3வ-நேத்ரேண (ஸ்ரீமத் பா 3.31.1). நீங்கள் செயல்படுவதற்கேற்ப, உங்கள் அடுத்த உடலை தயாரிக்கிறீர்கள். எனவே மரணத்துக்குப் பிறகு - மரணத்திற்கு பிறகு என்றால், இந்த உடல் முடிந்தபிறகு- பிறகு உடனேயே நீங்கள் மற்றொரு உடலைப் பெறுவீர்கள், ஏனெனில் அதற்கான களப்பணியை- என்ன வகையான உடலை பெற வேண்டும் என்பதை நீங்கள் ஏற்கனவே செய்திருக்கிறீர்கள். எனவே, இந்த மனிதன் அஜாமிளன், தனது குழந்தையை நன்றாக பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தான், மேலும் அவனுடைய முழு மனமும் அந்தக் குழந்தையின் மீது ஆழ்ந்திருந்தது. எனவே... (யாரோ கருத்து கூறுகிறார்கள்) (மறுபக்கத்தில்) : தொந்தரவு செய்யாதீர்கள். எனவேதான் அவன் மூடா4 என்று அழைக்கப்படுகிறான். இங்கு கூறப்பட்டுள்ளது, போ4ஜயன் பாயயன் மூட:4 ஏதோ ஒரு நாள் வந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். அது நமக்கு முன்னால் இருக்கிறது. அதன் பெயர் ம்ரு'த்யு, மரணம். நாம் அதனை மறந்து விடுகிறோம். இதுதான் நம்முடைய பூரணமற்றதன்மை. எனவே, இந்த மனிதன் அதனை மறந்து, ஒரு அன்பான தந்தையாக, அல்லது அன்பான கணவனாக இருப்பதில் மிகவும் ஓய்வில்லாமல் இருந்தான். அல்லது வேறு ஏதாவது. நான் பல வகையான உறவு முறைகளை பெற்றிருக்கிறேன். ஒரு அன்பான நண்பராகவோ அல்லது பொறாமை கொண்ட எதிரியாகவோ, நாம் பல்வேறு உறவு முறைகளை கொண்டுள்ளோம். இந்த உலகில் உள்ள நாம் அனைவருமே, ஏதாவது ஒன்றை கொண்டிருக்கிறோம், அது பொறாமையாகவோ , அன்பாகவோ இருக்கலாம், அது பொருட்டல்ல. எனவே, இந்த வகையான வாழ்வில், முன்னால் இருக்கும் மரணத்தை நாம் மறந்து விடுகிறோம். எனவேதான் நாம் மூட:4 மூட:4 என்றால் அயோக்கியன், கழுதை, உண்மையான நன்மை எது என்று தெரியாதவன் கழுதையைப் போல. கழுதை.... மூட:4 என்றால் கழுதை. கழுதைக்கு தன் சுயநலன் எது என்று தெரியாது வண்ணானால், மூன்று டன் துணி மூட்டை கழுதையின் மீது ஏற்றப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம், அதனால் நடக்கவே முடியாது; இருந்தும் அது, அதனை செய்ய வேண்டும். "நான் பல டன் துணி மூட்டைகளை என் முதுகின் மீது சுமக்கிறேன்.இதனால் எனக்கு என்ன பயன்? ஒரு துணி கூட எனக்கு சொந்தம் அல்ல." என்பதெல்லாம் அதற்குத் தெரியாது. எனவே கழுதைக்கு இப்படிப்பட்ட எந்த உணர்வும் இல்லை. கழுதை என்றால், இப்படிப்பட்ட உணர்வற்றவன். அது நினைக்கிறது, "இது என்னுடைய கடமை. இவ்வளவு துணியை சுமப்பது, இது என்னுடைய கடமை" ஏன் இது கடமை? "ஏனெனில் வண்ணான் எனக்கு புற்களை அளிக்கிறான்." "புல் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். நான் ஏன் இந்த கடமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்." என்ற உணர்வு அதற்கு இல்லை. இதுதான்.... அனைவரும் தங்கள் கடமையை பற்றி கவலை கொள்கிறார்கள். சிலர் அரசியலைப் பற்றி, சிலர் குடும்பத்தை பற்றி, சிலர் வேறு ஏதாவதைப் பற்றி. ஆனால் அவன் ஒரு தவறான கடமையை ஏற்றுக்கொண்டுள்ள காரணத்தினால் கடுமையாக உழைக்கிறான், எனவே அவன் ஒரு கழுதை. அவன் தன் உண்மையான வேலையை மறக்கிறான். உண்மையான வேலை என்பது - மரணம் வரும். அது என்னை தவிர்க்காது. அனைவரும் கூறுவார்கள், "மரணத்தை போல் நிச்சயமானது." இப்போது, மரணத்திற்கு முன்பு, வைகுண்டத்தில், விருந்தாவனத்தில் நான் ஒரு நிலையைப் பெறும் அளவிற்கு செயல்பட வேண்டும், அங்கு கிருஷ்ணருடன் நித்தியமான வாழ்வு வாழலாம். இதுதான் நம்முடைய உண்மையான கடமை. ஆனால் இதை நாம் அறிய மாட்டோம். ந தே விது:3 ஸ்வார்த2-க3திம்' ஹி விஷ்ணும் (ஸ்ரீமத் பா 7.5.31).