TA/Prabhupada 1058 - பவகத்-கீதையின் பேச்சாளர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார்

Revision as of 16:30, 2 April 2015 by Rishab (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 1058 - in all Languages Category:TA-Quotes - 1966 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

660219-20 - Lecture BG Introduction - New York

பவகத்-கீதையின் பேச்சாளர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். பவகத் கீதையின் பேச்சாளர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். பகவத்-கீதையின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர் குறிப்பிடப்படுகிறார், முழுமுதற் கடவுளாக, பகவானாக. நிச்சயமாக, "பகவான்" சில சமயங்களில் ஏதோ சக்தி வாய்ந்தவர்களுக்கும் அல்லது சக்தி வாய்ந்த தேவர்களுக்கும் நியமிக்கப்படுகிறது, ஆனால் இங்கு பகவான் என்று நிச்சயமாக ஸ்ரீ கிருஷ்ணருக்கு நியமிக்கப்பட்டுள்ளது, மிக உயர்ந்த தனித்துவம் பெற்றவர், ஆனால் அதே நேரத்தில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அனைத்து ஆச்சாரியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது போல், நான் சொல்ல எண்ணுவது, சங்கராசார்ய, ராமாநூஜாசார்ய, மத்வாசார்ய, நிம்பார்க ஸ்வாமி இன்னும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் மேலும் மற்ற பலரும். இந்தியாவில் பல அதிகாரமுள்ள கல்விமான்கள் மேலும் ஆச்சார்யர்கள், நான் எண்ணுவது யாதெனில், வேத அறிவு நிறைந்த அதிகாரமுள்ளவர்கள். அனைவரும், சங்கராசார்ய உட்பட, கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள். பகவான் தாமே இதை தானே நிலைநாட்டியுள்ளார்கள் பகவத்-கீதையில் முழுமுதற் கடவுள் என்று. அவர் ப்ரமா-ஸம்ஹிதாவிலும் அனைத்து புராணாகளிலும், தனிச் சிறப்புடைய பாகவத புராணத்திலும் அவ்வாறே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். கிருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் (ஸ்ரீ.பா.1.3.28). ஆகையால் நாம் பகவத்-கீதையை முழுமுதற் கடவுள் தானே அறிவுரைதிருப்பதை அதில் உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால் பகவத்-கீதையின் நான்காம் அத்தியாயத்தில் பகவான் கூறுகிறார்: இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான ஹமவ்யயம் விவஸ்வான்மனவே ப்ராஹ மனுரிக்ஷ்வாகவே ப்ரவீத் (ப.கீ.4.1). ஏவம் பரம்பரா-ப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது: ஸ காலேனேஹ மஹதா யோகோ நாஷ்ட: பரந்தப (பா.கீ.4.2). ஸ ஏவாயம் மயா தேத்ய யோக: ப்ரோக்த: புராதன: பக்தோஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் (பா.கீ.4.3). இதன் எண்ணம் என்னவென்றால், பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார் அதாவது "இந்த யோகா, இந்த யோகாவின் அமைப்பு, பகவத்-கீதை, முதலில் என்னால் சூரிய-பகவானிடம் பேசப்பட்டது பிறகு சூரிய-பகவான் மனுவிடம் விளக்கினார். மனு இக்ஸ்வாகுவிடம் விளக்கினார், அந்த வழியாக, சங்கிலித் தொடராக ஒன்றின் பின் ஒன்றாக, இந்த யோகா அமைப்பு வருகிறது, மேலும் செயலின் காலப் போக்கில் இந்த அமைப்பு இப்பொழுது மறைந்துவிட்டது. ஆகையினால், நான் உங்களிடம் அதே யோகா அமைப்பைப் பற்றி மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறேன். பகவத்-கீதையின் அல்லது கீதோபநிஷத்தின் அதே பழமையான யோகா அமைப்பு. ஏனென்றால் நீங்கள் என் பக்தர், மேலும் நீங்கள் என் நண்பர், ஆகையினால் உங்களுக்கு மட்டும்தான் இதை புரிந்துக் கொள்வது சாத்தியமாகும்." இப்பொழுது இதன் பொருளுரை என்னவென்றால் பகவத்-கீதை ஒரு ஆய்வறிக்கை, இது விசேஷமாக பகவானின் பக்தர்களுக்கு உரியது. அங்கே மூன்று வகையான திவ்வியமானவர்கள் இருக்கிறார்கள் அவர்கள், ஞானீ, யோகியும் பக்தாவும். அல்லது அருவவாதிகள், அல்லது தியானம் செய்பவர்கள், அல்லது பக்தர்கள். ஆகையால் இங்கு விபரமாக சொல்லப்படுகிறது. பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார் அதாவது "நான் பேசிக்கொண்டிருக்கிறேன் அல்லது நான் உங்களை பரம்பராவின் முதல் மனிதனாக்குகிறேன். ஏனென்றால் பழைய பரம்பரா அல்லது சங்கிலித் தொடராக வருவது இப்பொழுது உடைந்துவிட்டது, ஆகையினால் நான் மற்றொரு பரம்பராவை மறுபடியும் நிறுவ விரும்புகிறேன் அதே தொடராக சிந்தித்து சூரிய பகவானிடமிருந்து மற்றவர்களுக்கு கீழே வந்தது போல். ஆகையால் நீங்கள், நீங்கள் அதை எடுத்து பரப்புங்கள். அல்லது இந்த அமைப்பு, பகவத்-கீதையின் யோகா அமைப்பு தற்பொழுது உங்கள் மூலமாக பரப்பப்படும். நீங்கள் பகவத்-கீதையை புரிந்துக் கொண்ட அதிகாரியாவீர்கள்." இப்பொழுது இங்கு இருப்பது வழிக்காட்டியாக பகவத்-கீதை விசேஷமாக அர்ஜுனனுக்கு அறிவுறையாக வழங்கப்பட்டது. பகவானின் பக்தர், கிருஷ்ணரின் நேரடி மாணவன். அது மட்டுமல்ல, அவர் கிருஷ்ணரின் மிக நெருங்கிய நண்பர். ஆகையினால் பகவத்-கீதையை, கிருஷ்ணருக்குச் சமமான தன்மைகள் பெற்றிருக்கும் ஒருவரால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும். அப்படியென்றால் அவர் ஒரு பக்தராக இருக்க வேண்டும், அவர் உறவுள்ளவராக, பகவானுடன் நேரடி உறவுக் கொண்டவராக இருக்க வேண்டும்.