TA/Prabhupada 1068 - இயற்கையின் வேறுபட்ட குணத்திற்கு ஏற்ப அங்கே மூன்று விதமான செயல்கள் இருக்கின்றன

Revision as of 17:20, 6 April 2015 by Rishab (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 1068 - in all Languages Category:TA-Quotes - 1966 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

660219-20 - Lecture BG Introduction - New York

பகவான் பூரணமாக அல்லது எந்த விதத்திலும் குறைவற்றவராக இருப்பதால், ஜட இயற்கையின் சட்டதிட்டங்களுக்கு அவர் அடிமைப்பட வாய்ப்பே இல்லை. ஆகையால் ஒருவர் இதை புரிந்துக் கொள்ளும் புத்திசாலியாக இருந்து அதாவது பகவானைத் தவிர, இந்த கொள்களில் இருக்கும் எந்த பொருளுக்கும் யாரும் உரிமையாளர் அல்ல. அது பகவத்-கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது: அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமன்விதா: (ப.கீ.10.8). மூலமான படைப்பாளர் பகவானே. அவரே ப்ரமாவை படைத்தார், அவர் படைப்பாளர். அதுவும் விவரிக்கப்பட்டுள்ளது. அவரே ப்ரமாவை படைத்தார். பதினொன்றாம் அத்தியாயத்தில் பகவான் ப்ரபிதாமஹ (ப.கீ.11.39) என்று விளிக்கப்படுகிறார். ஏனென்றால் ப்ரமா பிதாமஹ என்று விளிக்கப்படுகிறார், அதாவது தாத்தா, ஆனால் தாத்தாவையும் படைத்தவர் அவரே. ஆகையால் ஒருவரும் எதற்கும் உரிமையாளர் என்று உரிமைக் கோர முடியாது, ஆனால் அவர் பகவானால் அவருடைய பராமரிப்புக்கு என்று ஒதுக்கிவைக்கப்பட்ட பங்கை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பகவானால் நமக்கு ஒதுக்கப்பட்ட பங்கை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதுவும் பகவத்-கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் போரிடக் கூடாது என்று அர்ஜுனர் முடிவு செய்தார். இது அவருடைய சுய முடிவு. தனது உறவினர்களைக் கொன்ற பின் நாட்டை அனுபவிக்கத் தன்னால் இயலாது என்று அர்ஜுனர் பகவானிடம் கூறினார். அந்த கண்ணோட்டத்தின் காரணம் உடல் மீதான முடிவு. ஏனென்றால் அவர் தானே உடல் என்று நினைத்துக் கொண்டிருந்தார், மேலும், உடலின் உறவினர்கள், அவர் சகோதரர்கள், அவர் மருமகன்கள், அவர் மாமனார் அல்லது அவர் தாத்தா, அவர்கள் தன் உடலின் விரிவாக்கம், மேலும் அவர் தனது உடலின் தேவைளை திருப்திபடுத்த இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தார். இந்தக் கண்னோட்டத்தை மாற்றவே பகவானால் கீதை உபதேசிக்கப்பட்டது. அவர் பகவானுடைய வழிகாட்டியின் கீழ் போர் புரிய சம்மதித்தார். மேலும் அவர் கூறினார், கரிஷ்யே வசனம் தவ (ப.கீ.18.73). ஆகையினால் இந்த உலகில் மனித இனம் பூனைகளையும் நாய்களையும் போல் சண்டை போடுவதற்காக அல்ல. அவர்கள் மனித வாழ்வின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துக் கொள்ளும் திறமைசாலிகளாக இருக்க வேண்டும் மேலும் சாதாரண மிருகங்களைப் போல் நடந்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் . மனித வாழ்வின் நோக்கத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த அறிவுரை எல்லா வேத இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது, இதன் சாராம்சம் பகவத்-கீதையில் விளக்கப்பட்டுள்ளது. வேத இலக்கியம் மனிதர்களுக்கானது பூனைகளுக்கும் நாய்களுக்குமல்ல. பூனைகளும் நாய்களும் அது உண்பதற்கான மிருகங்களை கொல்லலாம், அதற்காக அவற்றின் பங்கில் பாவம் வருவதற்கான கேள்வியே இல்லை. ஆனால் ஒரு மனிதன் கட்டுப்பாடற்ற தன் சுவையைத் திருப்திபடுத்த ஒரு மிருகத்தை கொன்றால், இயற்கையின் விதியை மீறியதற்காக அவர் பொருப்பேற்க வேண்டும். மேலும் பகவத்-கீதையில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது அதாவது மூன்று விதமான செயல்கள் இருக்கின்றன வேறுபட்ட இயற்கையின் குணங்களுக்கு ஏற்ப: நற்செயல்கள், தீவிரச்செயல்கள், அறியாமைச் செயல்கள். இதேபோல், மூன்று வகையான உணவுப் பொருள்களும் உண்டு: நற்செயல்களில் சாப்பிடத் தகுந்தது, தீவிரசெயல்களில் சாப்பிடத் தகுந்தது, அறியாமைச் செயல்களில் சாப்பிடத் தகுந்தது. இவை அனைத்தும் மிகத் தெளிவாக பகவத்-கீதையில் விவரிக்கப்பட்டுள்ளன, இந்த அறிவுரைகளை நாம் உபயோகித்தால், பிறகு நம் வாழ்வு முழுவதும் தூய்மைப் பெறும் மேலும் இறுதியில் நாம் சென்றடைய வேண்டிய இலக்கை அடையலாம். யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம (ப.கீ.15.6). அந்த தகவல் பகவத்-கீதையில் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த பௌதிக விண்வெளிக்கு அப்பால், வேறொரு ஆன்மீக விண்வெளி இருக்கிறது; அதை சநாதன விண்வெளி என்று அழைக்கிறோம். இந்த விண்வெளியில், இந்த மறைக்கப்பட்ட விண்வெளியில், நாம் காண்பது அனைத்தும் தற்காலிகமானது. இது உருவாகி, சிறிது நேரம் இருந்து, நமக்கு சில உபப் பொருள்களை உற்பத்தி செய்து, பிறகு அது குறைந்து நிலையிழந்து பிறகு அழிந்துவிடுகிறது. அதுதான் இந்த பௌதிக உலகின் நியதி. இந்த உடலை எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் பழத்தையோ வேறு எதையோ இங்கு படைக்கப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள், அதற்கும் இறுதியில் முழு அழிவு உண்டு. ஆகையால் இந்த தற்காலிக உலகிற்கப்பால் வேறொரு உலகம் இருக்கும் விபரம் அங்கு இருக்கிறது, அது பரஸ்தஸ்மாத்து பாவோ ன்யோ: (ப.கீ.8.20). அங்கே நித்தியமான வேறொரு இயற்கை இருக்கிறது, சநாதன, சநாதன நித்தியமானது. மேலும் ஜீவ, ஜீவனும் சநாதன என்று வர்ணிக்கப்படுகிறது. மமைவாம்சோ ஜீவ லோகே ஜீவபூத: சநாதன: (ப.கீ.15.7). சநாதன என்றால் நித்தியமான. பகவானும் பதினொன்றாம் அத்தியாயத்தில் சநாதன என்று வர்ணிக்கப்படுகிறார். ஏனென்றால் பகவானுக்கும் நமக்கும் நெறுங்கிய உறவு இருப்பதால், தன்மையில் நாமெல்லாம் ஒன்று. சநாதன உலகம், சநாதன முழுமுதற் கடவுள், சநாதன உயிர்வாழிகள், அவர்கள் தன்மையில் ஒரே நிலையில் இருக்கிறார்கள். ஆகையினால் பகவத்-கீதையின் முழு நோக்கமும் நம் சநாதன பணியை புத்துயிர்ப்பதுதான் அல்லது சநாதன, அது சநாதன தர்மம், அல்லது உயிர்வாழிகளின் நித்தியமான பணி. நாம் இப்பொழுது நிரந்தரமற்ற பலவிதமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறோம் மேலும் இந்த செயல்கள் தூய்மைப் படுத்தப்படும். நாம் இந்த நிரந்தரமற்ற செயல்களை விட்டு விட்டு, ஸர்வ-தர்மான பரித்யஜ்ய (ப.கீ.18.66). நாம் முழுமுதற் கடவுளின் விருப்பப்படி செயல்களை மேற்கொள்ளும் பொழுது, அதை நம் தூய்மையான வாழ்க்கை என்றழைக்கிறோம்.