TA/Prabhupada 0472 - இந்த இருளில் இருக்காதீர்கள். வெளிச்ச ராஜ்ஜியத்திற்கு உங்களை இடமாற்றம் செய்துக்கொள்ள
(Redirected from Haribol)
Lecture -- Seattle, October 7, 1968
பிரபுபாதர்: கோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமி. பக்தர்கள்: கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி. பிரபுபாதர்: எனவே நாம் வணங்கும் கடவுள் கோவிந்தம், எல்லா இன்பங்களின் இருப்பிடம், கோவிந்தன், கிருஷ்ணர். மேலும் அவர் ஆதி-புருஷம், முதலாம் நபர். எனவே கோவிந்தம் ஆதி- புருஷம் தமஹம் பஜாமி. பஜாமி என்றால் "நான் வணங்குகிறேன்," "நான் அவரிடம் சரணடைகிறேன், அவரை நேசிக்க ஒப்புக்கொள்கிறேன்." பிரம்மாவால் பாடல்களாக வழங்கப்பட்டுள்ள சொற்கள் இவை. அந்த பிரம்ம-சம்ஹிதா ஒரு பெரிய புத்தகம். ஐந்தாவது அத்தியாயத்தின் முதல் ஸ்லோகம் இவ்வாறாக விவரிக்கிறது - இறைவன், கோவிந்தன், அவருடையதான குறிப்பிட்ட ஆன்மீக தாமம் இருக்கிறது, அது கோலோக விருந்தாவனம் என்று அறியப்படுகிறது. அது இந்த பௌதிக வானத்திற்கு அப்பாற்பட்டது. உங்கள் பார்வை செல்லும் தூரம் வரை, இந்த பௌதிக வானத்தை நீங்கள் காணலாம், ஆனால் அந்த பௌதிக வானத்திற்கு அப்பால் ஆன்மீக வானம் உள்ளது. இந்த பௌதிக வானம், பௌதிக சக்தியால் மூடப்பட்டுள்ளது, மஹத்-தத்வா, பூமி, நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றால் ஆன ஏழு அடுக்குகளைக் கொண்ட திரை உள்ளது. அதற்கும் அப்பால் ஒரு கடல் உள்ளது, அந்த கடலுக்கு அப்பால் ஆன்மீக வானம் தொடங்குகிறது. அந்த ஆன்மீக வானத்தின், மிக உயர்ந்த கிரகம் கோலோக விருந்தாவனம் என்று அறியப்படுகிறது. இந்த விஷயங்கள் வேத இலக்கியத்திலும், பகவத் கீதையிலும் விவரிக்கப்பட்டுள்ளன. பகவத்-கீதை - எல்லாருக்கும் தெரிந்த புத்தகம். அங்கும் குறிப்பிடப்பட்டுள்ளது - "ந யத்ர பாஸயதே சூர்யோ ந ஷஷாங்கோ ந பாவகஹ" யத் கத்வா ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம (பகவத் கீதை 15 . 6) பகவத் கீதையில் மற்றொரு ஆன்மீக வானம் இருப்பதாகக் கூறப்படுகிறது, அங்கு சூரிய ஒளியே தேவையில்லை. நா யத்ர பாஸயதே சூர்யோ. சூர்ய என்றால் சூரியன், பாஸயதே என்றால் சூரிய ஒளியை விநியோகித்தல். எனவே சூரிய ஒளியே தேவையில்லை. ந யத்ர பாஸயதே சூர்யோ ந ஷஷாங்கோ ஷஷாங்கோ என்றால் சந்திரன் என்று பொருள். அங்கே நிலவின் ஒளியும் தேவையில்லை. ந ஷஷாங்கோ ந பாவகஹ. மின்சாரமும் தேவையில்லை. அதாவது ஒளியின் ராஜ்யம். இங்கு, இந்த பௌதிக உலகம் இருளின் ராஜ்யம். நீங்கள் அனைவரும் இதை அறிவீர்கள். இது உண்மையில் இருள் உலகம். இந்த பூமியின் மறுபக்கத்திற்கு சூரியன் சென்றவுடன், இங்கு இருள் சூழ்கிறது. அதாவது இயல்பில் அது இருளாக இருக்கிறது. சூரிய ஒளி, சந்திரனின் பிரகாசம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றால் மட்டுமே நாம் அதை வெளிச்சத்தில் வைத்திருக்கிறோம். உண்மையில், அது இருள். இருள் என்றால் அறியாமை என்றும் பொருள். இரவில் மக்கள் அறியாமையில் அதிகம் ஆழ்வதைப்போல. நாம் அறியாமையில் இருப்பவர்கள், ஆனால் இரவில், அதிக அறியாமையில் இருக்கிறோம். எனவே வேத அறிவுரை தமசி மா ஜோதிர் கம. வேதங்கள் கூறுகின்றன, "இந்த இருளில் நிலைத்திருக்க வேண்டாம். உங்களை ஒளியின் ராஜ்யத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். " மேலும் பகவத் கீதையும் கூறுகிறது ஒரு விசேஷ வானம் அல்லது ஆன்மீக வானம் உள்ளது . அங்கே, சூரிய ஒளி தேவையில்லை, சந்திரன் ஒளியும் தேவையில்லை, மின்சாரமும் தேவையில்லை, யத் கத்வா நா நிவர்த்தந்தே (பகவத் கீதை 15 . 6) யாராவது அந்த ஒளி ராஜ்யத்திற்குச் சென்றால், அவர் இந்த இருள் ராஜ்யத்திற்கு மீண்டும் வருவதில்லை. அப்படியென்றால் அந்த ஒளியின் ராஜ்யத்திற்கு நாம் எவ்வாறு மாற முடியும்? முழு மனித நாகரிகமும் இந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதாதோ பிரம்மா ஜிஜ்னாசா என்று வேதாந்தம் கூறுகிறது. அத: அத:. "எனவே நீங்கள் இப்போது பிரம்மத்தைப் பற்றி, பூரணத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும்." "எனவே இப்போது" என்பதன் பொருள் ... ஒவ்வொரு வார்த்தையும் குறிப்பிடத்தக்கவை. "எனவே" என்றால் இந்த மனித உடலை நீங்கள் பெற்றுள்ளீர்கள் - "எனவே. " அதஹ என்றால் "இனிமேல்" என்று பொருள். "இனிமேல்" என்றால் நீங்கள் பற்பல பிறவிகளைக் கடந்துவிட்டீர்கள், 8,400,000 இனங்கள். நீர்வாழ் உயிரிணங்கள் - 900,000. ஜலஜா நவ- லக்ஷானி ஸ்தாவரா லக்ஷ- விம்ஷடி.