TA/Prabhupada 0471 - கிருஷ்ணரை மகிழ்விக்க சுலபமான வழி - உங்கள் இதயத்தை கோறுவதுதான்.



Lecture on SB 7.9.9 -- Mayapur, March 1, 1977

பிரபுபாதர்: ஆகையால் பிரகலாத மகாராஜா நினைத்தார் அதாவது, அவர் ஒரு அசுர குடும்பத்தில் பிறந்திருந்தார், உக்ர, உக்ர-ஜாதம், இருப்பினும், அவர் கிருஷ்ணருக்கு, பகவான் நரசிம்ம தேவருக்கு, பக்தியுடன் சேவை செய்ய முடிவு செய்தார், யானைகளின் மன்னனான, கஜ-யூத பாயாவின் அடிச்சுவட்டை பின்பற்றினார்... அது ஒரு விலங்கு. உங்களுக்கு அந்த கதை தெரியும், அதாவது அவர் தண்ணீரில் இருந்த ஒரு முதலையால் தாக்கப்பட்டார். அவ்விருவருக்கும் இடையில் போராட்டம் நிகழ்ந்தது, அனைத்திற்கும் மேலாக, முதலை நீர்வாழ் விலங்கு; அதற்கு அபாரமான வலிமை இருந்தது. மேலும் யானை, மிகப் பெரிய, சக்திவாய்ந்த விலங்கு என்றாலும், அது நீர்வாழ் விலங்கு அல்ல, ஆகையால் அது மிகவும் உதவியற்ற நிலையில் இருந்தது. இறுதியில், அது பகவானின் திருநாமத்தை உச்சாடனம் செய்து வழிபட தொடங்கியது, எனவே அது காப்பாற்றப்பட்டது. அது காப்பாற்றப்பட்டது, மேலும் முதலை யானையின் காலைப் பிடித்ததால், அதுவும் காப்பாற்றப்பட்டது ஏனென்றால் அது ஒரு வைஷ்ணவன். இந்த விலங்கு, முதலை, அது ஒரு வைஷ்ணவரின் காலடியில் இருந்தது, எனவே அதுவும் காப்பாற்றப்பட்டது. (சிரிப்பு) இதுதான் கதை, உங்களுக்குத் தெரியும். ஆகையினால், சாடியா வைஷ்ணவ சேவா. அவர் மறைமுகமாக வைஷ்ணவருக்கு சேவையை வழங்கினார், அதனால் அவரும் விடுவிக்கப்பட்டார். எனவே பக்தி மிகவும் அருமையான விஷயம், மிக எளிதாக நீங்கள் பரம புருஷரின் ஆதரவைப் பெறலாம். மேலும் கிருஷ்ணர் உங்களிடம் திருப்தியடைந்தால், பிறகு மீதி என்ன இருக்கிறது? நீங்கள் அனைத்தையும் பெறுவீர்கள். நீங்கள் அனைத்தையும் பெறுவீர்கள். யஸ்மின் விஜநாதே சர்வம் ஏவ விஜநாதம் பவந்தி (முண்டக உபநிஷத் 1.3). கிருஷ்ணரை திருப்திப்படுத்தும் எளிதான வழி ... உங்களுக்கு அதிக பணம், அதிக கல்வி, அந்த வகையில் எதுவும் தேவையில்லை. உங்கள் உள்ளம் மட்டுமே போதுமானது: " கிருஷ்ணரே, நீங்களே என் பிரபு. நீங்கள் என் நித்தியமான எஜமான். நான் உங்கள் நித்தியமான சேவகன். உங்கள் சேவையில், என்னை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்." அதுவே ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண ஹரே ஹரே / (பக்தர்கள் உச்சாடனம் செய்கிறார்கள்) ஹரே ராம, ஹரே ராம, ராம, ராம, ஹரே ஹரே. இதுவே ஹரே கிருஷ்ண மந்திரத்தின் பொருள்: " கிருஷ்ணரே, கிருஷ்ணரின் சக்தியே, நான் உங்கள் சேவகன். எப்படியோ நான் இப்போது இந்த பௌதிக பந்தத்தில் விழுந்துவிட்டேன். தயவுசெய்து என்னை கை தூக்கிப் பிடித்து சேவையில் ஈடுபடுத்துங்கள்." அயி நந்த தனுஜ பதிதம் கிண்கரம் மாம் விஷமே பவம் புதௌ. அதுதான் சைதன்ய மஹாபிரபு நமக்கு கற்பித்தது. பவம் புதௌ. இந்த பௌதிக உலகம் ஒரு சமுத்திரத்தைப் போன்றது, ப4வ. ப4வ என்றால் மீண்டும்மீண்டும் பிறப்பதும் இறப்பதும், மேலும் ஆம்பு என்றால் ஆம்புதௌ, என்றால் கடலில், சமுத்திரத்தில். இந்த சமுத்திரத்தில் வாழ்வதற்கு நாம் கடுமையாக போராடுகிறோம். ஆகையால் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், அயி நந்த தனுஜ பதிதம் கிண்கரம் மாம்: "நான் உங்கள் நித்தியமான சேவகன். எப்படியோ நான் இந்த சமுத்திரத்தில் விழுந்து போராடிக் கொண்டிருக்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்." அயி நந்த-தனுஜ பதிதம் கிண்கரம் மாம் விஸமே பவம் புதௌ க்ருபாய. தங்கள் காரணமற்ற கருணையால் ... அயி நந்த தனுஜ பதிதம் கிண்கரம் மாம் விஸமே பவம் புதௌ க்ருபாய தவ பாத-பங்கஜ-ஸ்தித-தூலி ஸத்ருஷம் விசிந்தய (சைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 20 .32, சிஷாஷ்டகம் 5) இதுதான் பக்தி மார்கம், பக்தித் தொண்டு, மிகவும் அடக்கமானவராகவும், பணிவானவராகவும் ஆகி, எப்போதும் கிருஷ்ணரை வழிபடுவதுதான், "தயவுசெய்து என்னை பகவானாகிய தங்களுடைய தாமரைப் பாதங்களின் தூசியின் துகள்களில் ஒன்றாக கருதுங்கள்." இந்த மிக எளிமையான விஷயம். மன்- மனா. இந்த முறையில் கிருஷ்ணரைப் பற்றி சிந்தியுங்கள். அவருடைய பக்தராகி, அவரை வணங்குங்கள், மேலும் ஏதாகிலும் பத்ரம் புஷ்பம், சிறிய மலர், தண்ணீர் உங்களால் இயன்றதை, கிருஷ்ணருக்கு வழங்குங்கள். இவ்வாறாக மிகவும் அமைதியாக மகிழ்ச்சியாக வாழுங்கள். மிக்க நன்றி. பக்தர்கள்: வாழிய பிரபுபாதர்.