"ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வதன் உண்மையான அர்த்தம்-ஆன்மீக ஞானத்தில் அறிவார்ந்த அறிஞரைக் கண்டுபிடிப்பது. அவர்கள் அங்கே வாழ்கிறார்கள். அவர்களுடன் கூட்டுறவு கொள்வது, அவர்களிடமிருந்து அறிவைப் பெறுவது-இதுவே யாத்திரைக்குச் செல்வதன் நோக்கம். ஏனெனில் யாத்திரையில், புனித இடங்கள் ... என்னைப் போலவே, என் வசிப்பிடமும் விருந்தாவனத்திலேயே உள்ளது. ஆக, விருந்தாவனத்தில் பல சிறந்த அறிஞர்கள் மற்றும் புனிதர்கள் வாழ்கின்றனர். ஆகவே ஒருவர் அத்தகைய புனித ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டும், வெறுமனே தண்ணீரில் குளிப்பதற்காக மட்டுமல்ல."
|