"ஒரு சாது எல்லா உயிர்களுக்கும் நண்பனாவான். மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் நண்பனாவாவான். அவன் எறும்புகள், புழுக்கள், ஊர்வன, பாம்புகள் என அனைத்திற்கும் நண்பனாவான். திதிக்ஷவ꞉ காருணிகா꞉ ஸுஹ்ருத₃꞉ ஸர்வ-தே₃ஹினாம். மேலும் அவன் அஜாத-ஷ₂த்ரு. அவன் எல்லோரது நண்பன் என்பதால் எதிரி அற்றவன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உலகம் நாஸ்திகம் நிறைந்தது, இப்படிப்பட்ட சாதுவுக்குக் கூட எதிரிகள் உள்ளனர். இயேசு பிரானுக்கு எதிரிகள் இருந்தனர், மகாத்மா காந்திக்கும் தன்னைக் கொன்றவன் எதிரியாவான். எனவே உலகம் இப்படி துரோகத்தால் நிறைந்துள்ளது. ஒரு சாதுவுக்குக் கூட எதிரிகள் உள்ளனர். புரிகிறதா? ஆனால் சாதுவைப் பொருத்த வரை தனக்கு எதிரிகள் இல்லை. தான் எல்லோருக்கும் நண்பன். திதிக்ஷவ꞉ காருணிகா꞉ ஸுஹ்ருத₃꞉ ஸர்வ-தே₃ஹினாம் (SB 3.25.21). மேலும் அவன் அஜாத-ஷ₂த்ரவ꞉ ஷா₂ந்தா꞉, எப்போதும் சாந்தமானவன். இவையே சாதுவின் குணங்கள்."
|