"எனதன்பு அர்ஜுனா, நீயும் பற்பல பிறவிகள் எடுத்துள்ளாய். நீ எனது நித்திய சகா என்பதால், நான் எந்த கிரகத்தில் அவதரித்தாலும் நீயும் என்னுடன் வருவாய். எனவே நான் சூரிய கிரகத்தில் அவதரித்து சூரிய தேவனுக்கு இந்த பகவத் கீதையை உபதேசித்த போது நீயும் என்னுடன் அங்கிருந்தாய். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நீ அவற்றை மறந்துவிட்டாய். ஏனென்றால் நீ ஒரு உயிர்வாழி, நானோ முழுமுதற் கடவுள்." என்று பகவத் கீதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது முழுமுதற் கடவுளுக்கும் உயிர்வாழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம் பற்றி. என்னால் நினைவுபடுத்த முடியாது. மறதி என்னுடைய குணமாகும்."
|