TA/660720 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் புத்தர், கிருஷ்ணரின் ஒரு அவதாரமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார். எனவே இந்துக்களாகிய நாமும் கடவுளின் அவதாரமாக பகவான் புத்தரை வழிபடுகிறோம். ஒரு மிகப்பெரிய வைஷ்ணவ கவிஞரால் பாடப்பட்ட சிறந்த பதிகம் ஒன்றுள்ளது. அதைக் கேட்க மகிழ்வடைவீர்கள், நான் அதைப் பாடுகிறேன். நிந்த₃ஸி யஜ்ஞ-விதே₄ர் அஹஹ ஷ்₂ருதி-ஜாதம்
ஸத₃ய-ஹ்ருத₃ய த₃ர்ஷி₂த-பஷு₂-கா₄தம் கேஷ₂வ த்₄ருத-பு₃த்₃த₄-ஷ₂ரீர ஜய ஜக₃தீ₃ஷ₂ ஹரே ஜய ஜக₃தீ₃ஷ₂ ஹரே. இதன் பொருள் என்னவெனில், 'ஓ பிரபு கிருஷ்ணா, அப்பாவி விலங்குகள் மீது கருணை கொண்டு புத்த வடிவமெடுத்துள்ளீர்.' ஏனென்றால் மிருக வதையை நிறுத்துவதே பகவான் புத்தரின் பிரச்சாரமாக அமைந்தது. அவரது பிரதான நோக்கம் மிருக வதையை நிறுத்துவது" |
660720 - சொற்பொழிவு BG 04.06-8 - நியூயார்க் |