TA/660727 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வேத இலக்கியங்களில் முழுமுதற்கடவுள் உன்னத தலைவர் என அழைக்கப்படுகிறார். நித்யோ நித்யானாம் சேதனஷ்₂ சேதனானாம். நித்ய என்றால் நித்தியமானவர். நித்யானாம் என்றால் நித்தியமான ஏனைய பலர். நாம் நித்தியமான ஏனைய பலருள் அடங்குவோம். ஏக, அந்த நித்தியமான ஒருவர்... ஏகோ ப₃ஹூனாம் வித₃தா₄தி காமான். நித்தியமானவர்கள் இரு வகையினர். நாம் உயிர்வாழிகள், நாமும் நித்தியமானவர்கள். முழுமுதற் கடவுளும் நித்தியமானவர். நித்தியம் எனும்போது நாம் இருவரும் குணத்தின் அடிப்படையில் சமமே. அவர் நித்தியமானவர், நாமும் நித்தியமானவர்கள். ஸச்-சித்₃-ஆனந்த₃-விக்₃ரஹ (BS 5.1). அவரும் ஆனந்தமயமானவர் நாமும் ஆனந்தமயமானவர்கள், ஏனென்றால் நாம் ஒரே குணத்தின் பின்னப் பகுதிகளாவோம். ஆனால் அவர்தான் தலைவர்."
660727 - சொற்பொழிவு BG 04.11 - நியூயார்க்