"இந்த அணு விஞ்ஞான யுகத்தில் மிகச்சிறிய பௌதிக அணுவின் இருப்புப் பற்றிய அனுபவம் உண்டு, அதுபோலவே ஆன்மீக அணுவும் இருக்கிறது. பத்ம புராணத்தில் இந்த ஆன்மீக அணுவைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளதென்று முன்பு பலமுறை நான் விளக்கப்படுத்தினேன். அந்த ஆன்மீக சக்தியின் வடிவம் என்ன, அதாவது அந்த ஆன்மீக அணுவின் வடிவம் என்ன? அது முடியின் மேல் பாகத்தின் பத்தாயிரத்தின் ஒரு பாகமளவு காணப்படுகிறது. முடியின் மேல் பாகம் வரை நமக்கு அனுபவம் உள்ளது. அது மிகச்சிறியதொரு முனை. இப்போது அது பத்தாயிரம் பாகங்களாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பாகமே நீங்கள், ஆன்மீக ஆத்மா. இதுவே எமது நிலை."
|