"அனைத்து பௌதிக இயற்கையும் மூன்று குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் இயங்குகிறது: சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம். அனைத்து மானிட இனத்தையும் ஒன்றாக வகைப்படுத்த முடியாது. இந்த பௌதிக உலகில் இருக்கும்வரை அனைவரையும் ஒரு நிலைபடுத்த முடியாது. ஏனென்றால் அனைவரும் வேறுபட்ட இயற்கையின் ஆதிக்கத்தின் கீழ் இயங்குகிறார்கள். ஆகையினால் பிரிவு, இயற்கை பிரிவு தேவை. இதை நாம் கருத்து பரிமாரிக் கொண்டோம். ஆனால் நாம் இந்த பௌதிக நிலையை கடந்தால் ஒருனிலை ஏற்படும். பிரிவு இருக்காது. எவ்வாறு கடப்பது? அந்த நிலைதான் கிருஷ்ண உணர்வு. நாம் முழுமையாக கிருஷ்ண உணர்வில் நிறைந்திருக்கும் போது, இந்த பௌதிக குணங்கள் பாதிக்காது."
|