TA/660809 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வைகுண்டம் எனப்படும் கடவுளின் திருநாடு பற்றி சாஸ்திரங்களில் நாம் காண்கிறோம். வைகுண்டம் என்றால் விக₃த-குண்ட₂ யத்ர. குண்ட₂ என்றால் கவலைகள். கவலைகளற்ற இடம் வைகுண்டம் எனப்படும். கிருஷ்ணர் கூறுகிறார், நாஹம் திஷ்டா₂மி வைகுண்டே₂ யோகி₃னாம் ஹ்ருத₃யேஷு ச: "என்னருமை நாரதா, நான் வைகுண்டத்தில் இருப்பதாக எண்ண வேண்டாம், அதாவது கடவுளின் திருநாட்டில் மட்டுமென்று, அல்லது யோகிகளின் இதயத்தில் மட்டுமென்று எண்ண வேண்டாம். இல்லை. "தத் தத் திஷ்டா₂மி நாரத₃ யத்ர கா₃யந்தி மத்₃-ப₄க்தா꞉: "எங்கெல்லாம் எனது பக்தர்கள் எனது புகழைப் பாடி கீர்த்தனம் செய்கிறார்களோ, அங்கு நான் இருக்கிறேன். நான் அங்கு செல்வேன்."
660809 - சொற்பொழிவு BG 04.20-24 - நியூயார்க்