"ஆன்மீக வாழ்வை ஏற்றுக் கொள்ளும் ஒருவருக்கு விநாசம் கிடையாது. அவருக்கு அழிவு கிடையாது என்பதன் அர்த்தம், மறுபிறவியில் அவர் மீண்டும் மனிதனாகப் பிறப்பார். ஏனைய உயிரினங்களுக்கிடையில் அவர் தொலைந்து போவதில்லை. ஏனென்றால், அவர் பத்து சதவீத கிருஷ்ண உணர்வை பூர்த்தி செய்துள்ளார் என்றால், மீண்டும் அவர் பதினோரு சதவீதத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். பதினோரு சதவீதத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க அவர் மனிதவுடலை பெற வேண்டும். எனவே, இதன் அர்த்தம் கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ளும் எவரும் மறுபிறவியில் மனிதவுடலைப் பெறுவது நிச்சயம்."
|