"கல்வியில் எங்கள் முன்னேற்றத்தை கண்டு பெருமை கொள்கிறோம். 'நீங்கள் யார்?' என்று பலரிடம் நீங்கள் வினவினால், சரியான பதிலை எதிர்பார்பது கடினம். அனைவரும் உடலின் அடிப்படையில் இருக்கிறார்கள். ஆனால் நாம் உண்மையில் இந்த உடல் அல்ல. இதனை நாம் பலமுறை விவாதித்துள்ளோம். 'நான் இந்த உடல் அல்ல' என்னும் பரிட்சைஷயை கடந்தபின், ஒருவர் உண்மையான அறிவு பெற்ற நிலைக்கு வருகிறார். அதுதான் உண்மையான அறிவு, 'நான் யார்'. அதுதான் தொடக்க நிலை. இந்த அறிவை பகவான் கிருஷ்ணர், அர்ஜுனுக்கு அறிவிக்கிறார், 'இது ராஜ-விட்யா' என்று கூறுகிறார். ராஜ-விட்யா என்றால் தன்னை அறிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப செயல் புரிவது. அதுதான் ராஜ-விட்யா என்று கூறப்படுகிறது."
|