"ஶ்ரவனம் கீர்த்தனம் விஷ்னொ ஸமரனம். பகவத் கீதையிலிருந்து இப்போழுது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதை, வீட்டில் நீங்கள் நினைவில் கொண்டால், அதாவது, 'சுவாமிஜீ இவ்வாறு பேசினார், இதை எவ்வாறு என் வாழ்க்கையில் பிரயோகிப்பது?'... நாம் இதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த இடத்தைவிட்டு சென்றதும் மறந்துவிட கூடாது. மேலும் ஏதும் கேள்வியோ, சந்தேகமோ இருந்தால், நாம் இந்த சபைமுன் கேட்க வேண்டும். நான் விசாரணை செய்கிறேன். கேள்வி கேட்க உங்களை அழைக்கிறேன், ஏனென்றால் நாம் ஒரு அருமையான விஞ்ஞானத்தை புரிந்துக் கொள்ள முயற்ச்சி செய்கிறோம். அகையால் இதை ஒரு இக்கட்டான கற்றலால் புரிந்துக் கொள்ளலாம். உங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டிக் கொள்ளமாட்டோம்."
|