"கிருஷ்ண துவைபாயன வியாசர் கிருஷ்ணரின் சக்தி அளிக்கப்பட்ட அவதாரமாக கருதப்படுகிறார். அவர் ஒரு அவதாரமாக இல்லாவிட்டால் மிக அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை எழுதியிருக்க முடியாது. பதினெட்டு புராணங்கள், நான்கு வேதங்கள், நூற்றெட்டு உபநிஷதங்கள், வேதாந்தம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம். ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பதங்களைக் கொண்டுள்ளன. ஒரு மனிதன் இவ்வாறு எழுதுவதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. எனவே வேத வியாசர் கிருஷ்ணரின் அவதாரமாக கருதப்படுகிறார். அவர் எழுதுவதில் மிகவும் சக்தி வாய்ந்தவர்."
|