TA/661205 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஜீவாத்மா, உயிர்வாழிகள், கிருஷ்ணரின நித்தியமான தொண்டர்கள், மேலும் ஒருவர் எஜமானரின் குணங்களை அறிந்திருக்க வேண்டும், அப்போதுதான் அவருடைய தொண்டின் முறையும் பழக்கமும் நெருக்கமாக இருக்கும். நான் ஒரு இடத்தில் வேலை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். என் எஜமானர் எத்தகைய சிறந்தவர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய செல்வாக்கு, செல்வச் செழிப்பு மேலும் உயர்வை தெரிந்துக் கொண்டபின், நான் அதிகம் ஈடுபாடு கொள்கிறேன்: "ஓ, என் எஜமானர் உயர்ந்தவர்." ஆகையால் "பகவான்
மிகவும் உயர்ந்தவர், எனக்கும் பகவானுடன் தோடர்பு உள்ளது," என்று வெறுமனெ தெரிந்துக் கொள்ளவது போதுமானதல்ல. அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக உங்களால் கணக்கிட முடியாது, ஆனால் கூடியவரை அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்று நீங்கள் தெரிந்துக் கொள்ள வேனண்டும்." |
661205 - சொற்பொழிவு CC Madhya 20.152-154 - நியூயார்க் |