"எந்த நிலமும் உங்களுக்கு உரித்தானதல்ல. எல்லாம் கடவுளுக்குச் சொந்தமானவை. ஈஷா₂வாஸ்யம் இத₃ம் ஸர்வம் (ISO 1). அவரே உரிமையாளர். போ₄க்தாரம் யஜ்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ்₂வரம் (BG 5.29). நாம் தவறான விதத்தில் அத்துமீறி உரிமை கோருகிறோம். இந்த தவறான புரிதலால் அமைதியின்மை நிலவுகிறது. அமைதியை தேடுகிறீர்கள். உங்களுக்கு உரித்தில்லாத ஒன்றை தவறான விதத்தில் உரிமை கோரும் போது, எப்படி அமைதி நிலவ முடியும்? இங்கு ஸர்வைஷ்₂வர்ய-பூர்ண என்று கூறப்பட்டுள்ளது. எனவே எல்லா இடங்களும் கடவுளுக்குச் சொந்தமானவை, ஆனால் அந்த கோலோக பிருந்தாவனம் அவரது முக்கிய இருப்பிடம். நீங்கள் படத்தில் கண்டிருப்பீர்கள். அது தாமரை போன்றது. எல்லா லோகங்களும் வட்ட வடிவானவை, ஆனால் அந்த பரலோகம் தாமரை போன்றது. அந்த கோலோக பிருந்தாவனம் ஆன்மீக வெளியில் இருக்கிறது."
|