TA/661208 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பௌதிவாதியை எடுத்துக்கொண்டால், அவர்கள் மென்றதையே மெல்கிறார்கள். புன꞉ புனஷ்₂ சர்வித-சர்வணானாம் (SB 7.5.30). முந்தைய நாளில் நான் கொடுத்த உதாரணம், கரும்பை மென்று அதன் சாற்றை எடுக்க வேண்டும். பின்னர் அது தரையில் வீசப்படும். மீண்டும் அதை இன்னொருவர் எடுத்து மெல்கிறார், ஆனால் அங்கு சாறு இல்லை. எனவே நாம் ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்கிறோம். வாழ்வின் இந்த செயல்முறை நமக்கு மகிழ்ச்சியை தந்துவிடுமா என்று நாம் கேள்வி கேட்பதில்லை. ஆனால் நாம் ஒரே விடயத்தை முயன்று, முயன்று, முயன்று கொண்டே இருக்கிறோம். புலன் திருப்தியின் இறுதி நோக்கமும் அதியுயர் புலன் திருப்தியுமாவது பாலுறவு வாழ்வாகும். எனவே நாம் முயன்று, மென்று, சாற்றை எடுக்கிறோம். ஆனால் அதுவல்ல மகிழ்ச்சிக்கான செயல்முறை. மகிழ்ச்சி என்பது வேறு. ஸுக₂ம் ஆத்யந்திகம் யத் தத்₃
அதீந்த்₃ரிய-க்₃ராஹ்யம் (BG 6.21). உண்மையான ஆனந்தம் திவ்யமானது. திவ்யமானது என்றால் என்னுடைய நிலை என்ன, என்னுடைய வாழ்வின் செயல்முறை என்ன என்பவற்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த வழியில் கிருஷ்ண உணர்வு கற்பிக்கும்." |
661208 - சொற்பொழிவு BG 09.22-23 - நியூயார்க் |