சங்கர்ஷனரிலிருந்து மூன்று விரிவங்கங்கள் வெளிப்படுகின்றன. மஹா-விஷ்ணு, கர்போதகஷாயி-விஷ்ணு, க்ஷிரோதகஷாயி-விஷ்ணு ஆகியோர் சங்கர்ஷனரிலிருந்து வெளிப்படுகின்றனர். பௌதிக உலகம் படைக்கப்படும் சமயத்தில் மஹா-விஷ்ணு இருக்கிறார். மஹா-விஷ்ணுவிலிருந்து இப்பிரபஞ்சங்கள் எல்லாம் தோன்றுகின்றன. மஹா-விஷ்ணு கர்போதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். கர்போதகஷாயி-விஷ்ணு ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் நுழைகிறார், பின்னர் ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் கர்போதகஷாயி-விஷ்ணு க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவிற்கு இப்பிரபஞ்சத்தினுள் துருவ நட்சத்திரத்திற்கு பக்கத்தில் ஒரு உலகம் உண்டு. க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவின் பரமாத்மா விரிவங்கம் ஒவ்வொருவரின் இதயத்தினுள்ளும் நுழைகிறார்."
|