"கிருஷ்ணருக்கு எண்ணற்ற விரிவாகங்கள் உள்ளன. ஆனால் சில, அவர் முழுமுதற் கடவுள் என்பதை நிரூபிக்க இங்கு தோன்றிய போது காண்பிக்கப்பட்டது, ஏனெனில் எதிர்காலத்தில் பல முட்டாள்கள் அவரைப் போல் பாவனை செய்து தானே பகவான் என்பார்கள். ஆனால் கிருஷ்ணரின் வாழ்க்கையில் பல வழக்கமில்லாத அம்சங்கள், எவராலும் காண்பிக்க முடியாதபடி இருந்தது. கோவர்தன மலைப் போல். அந்த படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏழு வயதில் மலையை தூக்கினார். இளம் வயதில் 16,000 மனைவிகளை மணந்தார், 16,000 அம்சங்கள்... அவர் குருக்ஷேதிர போர்களத்தில், தன்னுடை விஸ்வரூபத்தை காட்டினார். எனவே 'நான் கடவுள்' என்று பிரகடனம் செய்யும் முன்பு, இந்த வழக்கமில்லாத அம்சங்களை காண்பிக்க தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில், எந்த சுயநினைவுள்ள மனிதனும் முட்டாள்களை பகவானாக எற்றுக் கொள்ளமாட்டார்கள்."
|