"இந்த பௌதிக படைப்பைப் பொறுத்தவரையில், "அவரது பௌதிக சக்தியால் இந்த பௌதிக உலகத்தையும் அதிலுள்ள எண்ணற்ற பிரபஞ்சங்களையும் படைக்கிறார்" என்று இங்கு கூறப்பட்டுள்ளது. எனவே வெறுமையிலிருந்து இப்பௌதிக உலகம் தோன்றியதாக ஒருவரும் எண்ணக் கூடாது. இது எல்லா வேத இலக்கியங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பாக பிரம்ம-சம்ஹிதையில், மேலும் பகவத் கீதையில் மயாத்₄யக்ஷேண ப்ரக்ருதி꞉ ஸூயதே ஸ-சராசரம் (BG 9.10) என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த பௌதிக உலகம் சுதந்திரமானதன்று. அது ஒரு தவறான புரிதல், ஜடம் தானாக இயங்குகிறதென்பது ஒரு தவறான கருத்து. ஜடத்திற்கு இயங்குவதற்கு எந்த சக்தியும் இல்லை. அது ஜட₃-ரூபா. ஜட₃-ரூபா என்றால் அசைவதற்கு எந்த சக்தியும் இல்லை, அல்லது தானாக எதையும் செய்து விடாது. எனவே முழுமுதற் கடவுளின் வழிகாட்டலின்றி இந்த வகையில் ஜடத்தால் வெளிப்பட முடியாது."
|