"பிரம்மதேவரின் ஒரு நாள் 4,300,000 தர 1000. இது பிரம்ம தேவரின் பன்னிரண்டு மணித்தியாலங்கள். இதேபோல் இருபத்தி நான்கு மணித்தியாலங்கள். இப்போது ஒரு மாதத்தைக் கணக்கிடுங்கள், இவ்வாறு ஒரு வருடம், மேலும் நூறு வருடத்தை கணக்கிடுங்கள். பிரம்மதேவரின் அந்த நூறு வருடங்கள் மஹாவிஷ்ணுவின் ஒரு சுவாச காலம் மட்டுமே. நாம் சுவாசிப்பது போல், உட்சுவாசம் வெளிச்சுவாசம் நடக்கிறது. சுவாச காலத்தில் சுவாசம் வெளிப்படும் போது, இவ்வனைத்து பிரம்மாண்டங்களும் படைக்கப்படுகின்றன, சுவாசம் உள்ளிழுக்கப்படும் போது, அவை அனைத்தும் முடிந்துவிடும், அவற்றின் கதை முடிந்தது. இவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றது. இப்பேற்பட்ட மஹாவிஷ்ணு கிருஷ்ணரின் விரிவங்கத்தின் நான்கில் ஒரு பாகம் ஆவார்."
|