TA/661225 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அனைத்து வேத இலக்கியத்திலும், ஒரே விஷயம் இருக்கிறது. வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய꞉ (ப.கீ. 15.15). கடைசி இலக்கு மேலும் கடைசி குறிக்கோள், இறுதி குறிக்கோள், கிருஷ்ணரே ஆவார். அகையினால் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஷரணம்ʼ வ்ரஜ (ப.கீ. 18.66). பாகவதம் கூறுகிறது, அகாம꞉ ஸர்வ-காமோ வா (ஸ்ரீ.பா. 2.3.10). நீங்கள் பௌதிக பிரியராக இருந்தாலும், நீங்கள் கிருஷ்ணரிடம் செல்ல வேண்டும். மேலும் கிருஷ்ணரும் உறுதிபடுத்தியுள்ளார், பஜதே மாம் அனன்ய பாக் ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய꞉ (ப.கீ. 9.30). அபி சேத் ஸு-துராசாரோ. ஒருவர் பகவானிடம் கேட்கக்கூடாது. இருப்பினும், ஒருவர் கேட்டால், அவர் ஏற்றுக் கொள்ளப்படுகிறார், ஏனென்றால் அவர் கிருஷ்ணர் என்ற இலக்குக்கு வந்துவிட்டார். அது அவருடைய சிறந்த தகுதி. அவர் கிருஷ்ண உணர்வில் இருக்கிறார். எனவே ஒருவருடைய அனைத்து குற்றமும், அவர் கிருஷ்ண பக்தனாகும் போது, எல்லாமே சிறப்பாக இருக்கிறது."
661225 - சொற்பொழிவு CC Madhya 20.337-353 - நியூயார்க்