"நான் உன்னை கேட்கும் போது அல்லது நீ என்னை கேட்கும் போது, "நீ யார்?", இந்த உடல் சார்ந்த உறவை நான் கூறுகிறேன். நீங்கள் பைத்தியமா? உங்களில் யாராவது நீங்கள் பைத்தியம் அல்ல என்று சொல்ல முடியுமா? நீங்கள், நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், உங்கள் அடையாளம், உங்களுக்கு தொடர்பில்லாத ஒன்றுடன் அடையாளம் காட்டப்பட்டால், நீங்கள் பைத்தியம் இல்லையா? நீங்கள் பைத்தியம் இல்லையா? ஆகவே இந்த உடல் சார்ந்து அடையாளம் காட்டும் அனைவரும் பைத்தியமே, அவன் பைத்தியமே. இது இந்த உலகத்திற்கு ஒரு சவால். எவனொருவன் பகவனின் சொத்து, நிலம், பூமி, ஆகியவற்றை தன் சொந்த சொத்து என்று உரிமை கொள்கிறானோ அவன் ஒரு பைத்தியக்காரன். இது ஒரு சவால். யாராவது இது அவன் சொத்து, இது அவன் உடல் என்று நிலைநாட்டடும். நீங்கள் வெறுமனே, இய்றகையின் சூழ்ச்சியால், ஒரு இடத்தில் அமர்த்தப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு உடலில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு உணர்வின் கீழ் இடப்பட்டு, இயற்கையின் சட்டம் உங்களை அதிகாரம் செய்கிறது. நீங்களும் அதில் பைத்தியமாக இருக்கிறீர்கள்."
|