"ஆக பரம புருஷர், முழுமுதற் கடவுள்தான் அனைவரையுவிட மிகவும் முதுமையானவர், ஆனால் நீங்கள் பார்க்கும் போதெல்லம், அவர் ஒரு வாலிபனாக தோற்றமளிப்பார். ஆத்யம்ʼ புராண புருஷம்ʼ நவ-யௌவனம்ʼ ச (பி.ஸ 5.33). நவ-யௌவனம் என்றால் செழுமையான இளைஞன். இது பகவான் சைதன்யரால் விவரிக்கப்பட்டுள்ளது, இது பகவானின் மற்றோரு தனிச் சிறப்புத் தன்மை. கிஷோர-ஷேகர-தர்மீ வ்ரஜேந்த்ர-நந்தன. கிஷோர-ஷேகர. கிஷோர என்றால்... கிஷோர வயது என்பது பதினொறு வயதிலிருந்து பதினாறு வயதுவரை ஆகும். இந்த நிலை ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள்? இளமை பருவம? ஆம். இது, இந்த வயது... ஆக கிருஷ்ணர் தன்னை ஒரு பதினொறு வயதிலிருந்து பதினாறு வயதுவரை இருக்கும் ஒரு இளைஞனாக பிரதிநிதிக்கிறார். அதற்கு மேல் அல்ல. குருக்ஷேத்ர போரில் கூட, அவர் ஒரு பாட்டனாராக இருந்தார், இருப்பினும், அவர் தோற்றம் ஒரு வாலிபனாக இருந்தது."
|