TA/670104c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"புலன்களை கட்டுப்படுத்த முக்கியமான பணி யாதெனில் நாக்குதான். நான் பலமுறை விளக்கியுள்ளேன் அதாவது நாக்குதான் அனைத்து புலன்களுக்கும் ஆரம்பம் என்று. ஆகையால் உங்களால் நாக்கை கட்டுப்படுத்த முடிந்தால், பிறகு நீங்கள் மற்ற புலன்களையும் கட்டுப்படுத்த முடியும். மேலும் உங்களால் நாக்கை கட்டுப்படுத்த முடியாவிட்டால், பிறகு உங்களால் மற்ற புலன்களை கட்டுப்படுத்த முடியாது. ஆகையால் நீங்கள் புலன்களை கட்டுப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். நாக்கிற்கு இரண்டு செயல்கள் உள்ளன: சுவைப்பது மேலும் அதிர்வுறுவது. அதிர்கிறது ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே மேலும் கிருஷ்ண பிரசாதம் சுவைப்பது. நீங்கள் எவ்வாறு முன்னேற்றம் அடைகிறீர்கள் என்று பாருங்கள். இதை டாம: என்று கூறுவார்கள். எனவே உங்களால் புலன்களை கட்டுப்படுத்த முடியும்போது, இயல்பாக உங்களால், உங்கள் மனதை கட்டுப்படுத்த முடியும். இதை ஸாம: என்று கூறுவார்கள். ஆக இதுதான் செயல்முறைகள். எனவே நாம் இந்த செயல்முறையை பயிற்சி செய்து மேலும் இதை நம்பிக்கையான ஆதாரம் மூலம் கற்று, நம் வாழ்க்கையில் ஒன்றிப் போக வேண்டும். இதுதான் மானிடப்பிறவியை சரியாக பயன்படுத்தும் முறை. நாம் இதை கற்க வேண்டும், பயிற்சி செய்ய வேண்டும், மேலும் நம் வாழ்க்கையை வெற்றிகரமாக்க வேண்டும். மிக்க நன்றி."
670104 - சொற்பொழிவு BG 10.04 - நியூயார்க்