"கிருஷ்ணரின் நித்தியமான திரு உறுவத்தை எவ்வாறு ஒருவர் காண்பது? வெறுமனே சேவை செய்வதின் மூலம். இல்லையெனில் சாத்தியமே இல்லை. ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ (பக்தி-ரஸாம்ருʼத-ஸிந்து 1.2.234). நீங்கள் பக்தி தொண்டில் ஈடுபட்டால், பிறகு பகவான் தானே உங்களுக்கு காட்சி அளிப்பார். உங்களால் பகவானை பார்க்க முடியாது. நீங்கள்... உங்கள் மிகச் சிறிய முயற்சியால் பகவானை பார்க்க முடியாது. அது சாத்தியமில்லை. நடு இரவில், இருளாக இருக்கும், சூரியனை காண சாத்தியமில்லை. சூரியன் தானே தோன்றும் போது நீங்கள் பார்க்க முடியும். சூரியனுக்கு ஒரு நேரம் இருக்கிறது, சுமார் 4:30 அல்லது 5:00 அதிகாலையில் அது உடனே தோன்றும். அது தானே தோன்றியதும், நீங்களே பார்க்கலாம், நீங்கள் சூரியனையும் உலகத்தையும் பார்க்கலாம். நீங்கள் சூரியனை பார்க்காதவரை, இருளில் இருப்பீர்கள், உலகமும் இருளில் இருக்கும் மேலும் உங்களால் பார்க்க முடியாது."
|