TA/670207b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் சந்நியாசியை பார்த்ததும், உடனடியாக அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், தண்டனையாக ஒரு நாள் உணாவிரதம் இருக்க வேண்டும். அவர் உணவு உட்கொள்ள கூடது. "ஒ, நான் ஒரு சந்நியாசியை பார்த்தேன், ஆனால் அவருக்கு மரியாதை அளிக்கவில்லை. எனவே அதற்கான பிராயசித்தமாக ஒரு நாள் உணாவிரதம் இருக்க வேண்டும்." இதுதான் முறை. ஆகவே சைதன்ய மஹாபிரபு, அவரே பகவானாக இருப்பினும், அவருடைய நடவடிக்கையும் மேலும் பண்பாடும் ஒப்பற்றது. அவர் சந்நியாசியை பார்த்ததும், உடனடியாக அவருக்கு மரியாதை அளித்தார். பாத ப்ரக்ஷாலன கரி வஸிலா ஸேஇ ஸ்தானே (சி.சி. அதி 7.59). மேலும் ஒருவர் வெளியில் இருந்து வரும்பொழுது, அவர் அறையினுள் செல்லும் முன் கால்களை கழுவவேண்டும் என்பது வழக்கம், முக்கியமாக சந்நியாசிகளுக்கு. ஆகவே அவர் கால்களை கழுவி வெளியே உட்கார்ந்திருந்த மற்ற சந்நியாசிகளுடன், சற்று தள்ளி, அவர் கால்களை கழுவிய இடத்தில் அமர்ந்தார்."
670207 - சொற்பொழிவு CC Adi 07.49-65 - சான் பிரான்சிஸ்கோ