"முன்னேற்றத்தின் இரண்டாம் படி நிலையில் இருப்பவர், கடவுளை அறிவார், கடவுள் மீது அன்பு செலுத்துவார், கடவுளுடன் தொடர்பாக, பக்தர்களையும் நேசிப்பார்..., கடவுளின் பக்தர்களுடன் நட்புறவு கொள்வார். ஈஷ்வரே தத்-அதீனேஷு பாலிஷேஷு (SB 11.2.46). அப்பாவிகளை பொறுத்தவரையில்... அப்பாவிகள் என்றால் அபராதிகள் அல்லாதவர்கள், கடவுள் என்றால் என்ன, அவருடனான தொடர்பு என்ன; என்பவற்றை அறியாத சாதாரண மனிதன். அவர்களுக்கு, கிருஷ்ண உணர்வின் இரண்டாம் படி நிலையில் இருப்பவர் ஞானம் புகட்டுவது கடமையாகிறது. வேண்டுமென்றே கடவுளுக்கு எதிராக உள்ள நாத்திகர்கள் தவிர்க்கப்பட வேண்டும்."
|