"இக்கலியுகத்தில், கடவுள் அவதரித்துள்ளார். கடவுளின் அந்த அவதாரம் என்ன? அவர் த்விஷ-அக்ருஷ்ணம், அவரது திருமேனி நிறம் கருப்பு அன்று. கிருஷ்ணர் கருப்பு. கிருஷ்ணராகிய பகவான் சைதன்யரின் செயல் என்ன? க்ருஷ்ண-வர்ணம். எப்போதும் அவர் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே, ஹரே ராம ஹரே... என்று உச்சாடனம் செய்து கொண்டே இருப்பார், வர்ணயதி. க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் மேலும் ஸங்கோபங்காஸ்த்ர-பார்ஷதம் (SB 11.5.32). அவர் சங்கம் கொண்டுள்ளார்... படத்தை பாருங்கள். அவர் மேலும் நால்வருடன் சங்கம் கொண்டுள்ளார். இந்த படத்திலும் பாருங்கள் அவர் சங்கம் கொண்டுள்ளார். இந்த படத்தை முன்னே வைத்துக் கொண்டு கீர்த்தனம் செய்து கொண்டும் நடனம் ஆடிக்கொண்டும் செல்லுங்கள். இதுவே வழிபாடு."
|