"இந்த உணர்வை அடைவீர்களானால், அதாவது "நான் கடவுளின் நித்திய சேவகன், எனது கடமை கடவுளுக்கு சேவை செய்வது..." கடவுளுடன் அல்லது கிருஷ்ணருடன் தொடர்புபட்ட ஏனைய சேவைகள் உண்டு. நாம் இந்த சேவையை அளிப்பது போன்று. கிருஷ்ண உணர்வை நாம் பரப்புகிறோம், ஏன்? அது ஒன்றும் வியாபாரம் அல்ல. ஆனால் நாம் கடவுளுடன் அல்லது கிருஷ்ணருடன் எமது உறவை ஸ்தாபித்துக் கொண்டதால், அதனை நாம் பரப்ப விரும்புகிறோம். எனவே, கிருஷ்ண உணர்வு என்பது இந்த பௌதிக உலகிலிருந்து விலகியிருப்பது பற்றியதல்ல, ஆனால் செயற்பாடுகள் வித்தியாசமானவை. கவலையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. இங்கு நாம் கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்கிறோம். ஓ, அது ஒன்றும் வியாபாரம் இல்லை. உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் நீங்கள் ஏற்றுக் கொண்டால் எமது முயற்சி சிறப்பாக அமைந்தது என்று அர்த்தம். நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கவலையேதும் இல்லை."
|